Advertisement


டி.எஸ்.பி., லவ்லினா * அசாம் அரசு கவுரவம்

ஜனவரி 12, 2022 21:13
 Comments  
 


Tokyo Olympics medalist Lovlina Borgohain appointed as DSP in Assam Police
 

கவுகாத்தி: அசாம் போலிஸ் ‘டி.எஸ்.பி.,’ ஆக நியமிக்கப்பட்டார் லவ்லினா. 

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா 23. டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டையில் அசத்திய இவர், வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். விஜேந்தர் சிங் (2008), மேரி கோமிற்கு (2012) அடுத்து பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை நட்சத்திரம் ஆனார். அசாமை சேர்ந்த இவருக்கு, மாநில போலிசில் ‘டி.எஸ்.பி.,’ ஆக நியமிக்க முடிவெடுக்கப்பட்டது. 

இதற்கான பணி நியமன ஆணையை மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, லவ்லினாவிடம் வழங்கினார். டி.ஜி.பி., பாஸ்கர் ஜோதி மகந்தா, லவ்லினாவில் தோளில் டி.எஸ்.பி., சின்னத்தை அணிவித்து கவுரவப்படுத்தினார். இதற்கான விழாவில் லவ்லினா உறுதிமொழி எடுத்துக் கொண்டார். 

லவ்லினா கூறுகையில்,‘‘அசாம் போலிசில் வேலை பார்த்துக் கொண்டே தேசத்திற்காக போட்டிகளில் சாதித்து பதக்கம் வெல்ல முயற்சிப்பேன். இது தான் எனது முதல் நோக்கம். தொடர்ந்து பயிற்சிகளில் கவனம் செலுத்துவேன். குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறும் வரையில் பணியில் இணைய மாட்டேன்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?