Advertisement


யூகி பாம்ப்ரி வெற்றி

ஜனவரி 11, 2022 18:16
 Comments  
 


Yuki Bhambri, india, moves to 2nd round of Australian Open Qualifiers
 

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் தகுதிச்சுற்று முதல் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி வெற்றி பெற்றார்.

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் ஜன. 17–30ல் மெல்போர்னில் நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் தற்போது நடக்கின்றன. ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, போர்ச்சுகலின் டொமினிகியுசை சந்தித்தார். முதல் செட்டை 6–4 என கைப்பற்றிய பாம்ப்ரி, அடுத்த செட்டையும் 6–2 என வசப்படுத்தினார். முடிவில் பாம்ப்ரி 6–4, 6–2 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று, இரண்டாவது போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், இத்தாலியின் மொரோனியிடம் 3–6, 5–7 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். 

அன்கிதா ஏமாற்றம்

பெண்கள் ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்று முதல் போட்டியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, உக்ரைனின் சுரென்கோவை எதிர்கொண்டார். முதல் செட்டை 1–6 என தோற்ற அன்கிதா, அடுத்த செட்டையும் 0–6 என மோசமாக இழந்தார். முடிவில் அன்கிதா 1–6, 0–6 என்ற செட் கணக்கில் எளிதாக தோல்வியடைந்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?