Advertisement


ஆஸி., ஓபனில் ஜோகோவிச் * கோர்ட் அனுமதி

ஜனவரி 10, 2022 21:11
 Comments  
 


Novak Djokovic Australian visa could be cancelled again despite court reprieve
 

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் ஜோகோவிச் பங்கேற்க காத்திருக்கிறார்.

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் வரும் 17–30ல் மெல்போர்னில் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் நட்சத்திரங்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இத்தொடரில் 9 முறை கோப்பை வென்ற, உலகின் ‘நம்பர்–1’ வீரர், செர்பியாவின் ஜோகோவிச், தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. இதனால் மெல்போர்ன் சென்ற இவரது விசா ரத்து செய்யப்பட்டது.

குடியேற்றத்துறை அதிகாரிகள் சார்பில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். இதை எதிர்த்து ஜோகோவிச் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நேற்று நடந்தது. முடிவில் ஜோகோவிச் விசா ரத்து செய்யப்பட்டதை நீக்கி நீதிபதி ஆன்டரி கெல்லி உத்தரவிட்டார்.

இதுகுறித்த அவர் வெளியிட்ட உத்தரவில்,‘ குடியேற்றத்துறை அதிகாரிகளால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஜோகோவிச், உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். பாஸ்போர்ட் உட்பட அனைத்து ஆவணங்களுடன் அவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்த உத்தரவு கிடைத்த 30 நிமிடத்தில் அவரை விடுவிக்க வேண்டும்,’ என தெரிவித்தார்.

இதனால் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் ஜோகோவிச் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சாதித்தால் 21வது கிராண்ட்ஸ்லாம் கோப்பை கைப்பற்றி புதிய வரலாறு படைக்கலாம்.

மீண்டும் சிக்கல்

இதனிடையே குடியேற்றத்துறை விதிகளின் படி, ஜோகோவிச் விசாவை மீண்டும் ரத்து செய்யும் உரிமை, அத்துறை அமைச்சருக்கு உள்ளது என ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் பால் கார்ப் தெரிவித்தார். இது நடந்தால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஜோகோவிச் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது. ஒருவேளை அப்பீல் செய்தாலும், ஏற்படும் கால தாமதம் காரணமாக இந்த ஆண்டு போட்டியில் பங்கேற்க முடியாத நிலை வரலாம்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?