Advertisement


ஐ.எஸ்.எல்., கால்பந்தில் கொரோனா * மோகன் பகான்–ஒடிசா மோதல் ஒத்திவைப்பு

ஜனவரி 08, 2022 20:58
 Comments  
 


ISL ATK Mohun Bagan vs Odisha FC match postponed after player tests COVID positive
 

படோர்டா: மோகன் பகான், ஒடிசா அணிகள் மோத இருந்த ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து எட்டாவது சீசன் நடக்கிறது. கொரோனா காரணமாக போட்டிகள் அனைத்தும் கடந்த ஆண்டு போல கோவாவின் மூன்று மைதானங்களில் நடக்கின்றன. ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வீரர்கள், பயிற்சியாளர்கள் நலனை முன்னிட்டு மருத்துவக்குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று, படோர்டாவின் பி.ஜே.என்., மைதானத்தில் நடக்க இருந்த லீக் போட்டியில் கோல்கட்டா மோகன் பகான், ஒடிசா அணிகள் மோத இருந்தன. இதனிடையே  மோகன் பகான் வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. உடனடியாக மருத்துவக்குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட வீரர் தனிமைப்படுத்தப்பட்டார். இதையடுத்து இப்போட்டி மற்றொரு தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

சமீபத்தில் இந்தியாவில் துவங்கிய ‘ஐ–லீக்’ கால்பந்து தொடர் 6 போட்டிகள் நடந்த நிலையில் பல்வேறு அணி வீரர்கள், பணியாளர்களுக்கு ஏற்பட்ட கொரோனா காரணமாக ஆறுவாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது ஐ.எஸ்.எல்., தொடரின் ஒரு போட்டியும் நிறுத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?