Advertisement


மும்பை, பெங்கால் வீரர்களுக்கு கொரோனா: ரஞ்சி கோப்பை நடக்குமா

ஜனவரி 03, 2022 21:58
 Comments  
 


Ranji Trophy Cricket, Mumbai, Bengal, COVID 19 Positive, Shivam Dube
 

மும்பை: மும்பை, பெங்கால் அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் திட்டமிட்டபடி ரஞ்சி கோப்பை நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ரஞ்சி கோப்பை முதல் தர கிரிக்கெட் தொடரின் 87வது சீசன் நாட்டின் முக்கிய நகரங்களில் வரும் ஜன. 13 முதல் மார்ச் 20 வரை நடக்கவுள்ளது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ சவுராஷ்டிரா, தமிழகம், மும்பை, ரயில்வேஸ் உள்ளிட்ட 38 அணிகள் 6 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன.

அதிகபட்சமாக 41 முறை கோப்பை வென்றுள்ள மும்பை அணி, ‘சி’ பிரிவில் டில்லி, ஐ தராபாத், கர்நாடகா, மஹாராஷ்டிரா, உத்தரகாண்ட் அணிகளுடன் இடம் பிடித்துள்ளது. இத்தொடருக்கான மும்பை அணியில் ‘ஆல்–ரவுண்டர்’ ஷிவம் துபே 28, இடம் பிடித்திருந்தார். இதுவரை இந்தியாவுக்காக ஒரு ஒருநாள், 13 ‘டி–20’ போட்டிகளில் விளையாடி உள்ள இவருக்கும், ‘வீடியோ அனாலிஸ்ட்’ ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து துபேவிற்கு பதிலாக சாய்ராஜ் பாட்டீல் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதேபோல ‘பி’ பிரிவில் ஹரியானா, கேரளா, ராஜஸ்தான், திரிபுரா, விதர்பா அணிகளுடன் இடம் பிடித்துள்ள பெங்கால் அணி வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருவதால் ரஞ்சி கோப்பை திட்டமிட்டபடி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே கடந்த சீசன் நடத்தப்படவில்லை. சமீபத்தில் 16 வயதுக்குட்பட்டோருக்கான விஜய் மெர்சன்ட் தொடரை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) ஒத்திவைத்துள்ளது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?