Advertisement


விஜய் சங்கர் கேப்டன்: ரஞ்சி தமிழக அணி அறிவிப்பு

டிசம்பர் 29, 2021 22:19
 Comments  
 


Ranji Trophy, Cricket, Tamil Nadu Squad, Vijay Shankar, Washington Sundar
 

சென்னை: ரஞ்சி கோப்பை தொடருக்கான தமிழக அணியின் கேப்டனாக விஜய் சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரஞ்சி கோப்பை முதல் தர கிரிக்கெட் தொடரின் 87வது சீசன் நாட்டின் முக்கிய நகரங்களில் வரும் ஜன. 13 முதல் மார்ச் 20 வரை நடக்கவுள்ளது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ சவுராஷ்டிரா, தமிழகம், மும்பை, ரயில்வேஸ் உள்ளிட்ட 38 அணிகள் 6 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன.

 

தமிழக அணி ‘டி’ பிரிவில் கோவா, ஜம்மு–காஷ்மீர், ரயில்வேஸ், சவுராஷ்டிரா அணிகளுடன் இடம் பிடித்துள்ளது. இதற்கான போட்டிகள் ஆமதாபாத்தில் நடக்கவுள்ளன. தமிழக அணி, தனது முதல் போட்டியில் ஜம்மு–காஷ்மீர் அணியை ஜன. 13ல் சந்திக்கிறது. இத்தொடருக்கான 20 பேர் கொண்ட தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக விஜய் சங்கர், துணை கேப்டனாக வாஷிங்டன் சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பர் பேட்டர் தினேஷ் கார்த்திக் இத்தொடரில் பங்கேற்கவில்லை.

 

சிலம்பரசன், சரவண குமார், சாய் சுதர்சன் என, மூன்று புதுமுக வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். சாய் கிஷோர், பாபா அபராஜித், பாபா இந்திரஜித், கவுசிக் காந்தி, சந்தீப் வாரியர், முகமது, அஸ்வின் கிறிஸ்ட் தேர்வாகினர். ‘யார்க்கர்’ நடராஜனுக்கு இடம் கிடைக்கவில்லை.

 

தமிழக அணி: விஜய் சங்கர் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர் (துணை கேப்டன்), பாபா அபராஜித், பாபா இந்திரஜித், ஜெகதீசன், ஷாருக்கான், சாய் சுதர்சன், பிரதோஷ் ரஞ்சன் பால், சூர்யபிரகாஷ், கவுசிக் காந்தி, கங்கா ஸ்ரீதர் ராஜு, சந்தீப் வாரியர், முகமது, சிலம்பரசன், சரவண குமார், அஸ்வின் கிறிஸ்ட், விக்னேஷ், சாய் கிஷோர், சித்தார்த், கவின்.

 

இந்த ஆண்டு சையது முஷ்தாக் தொடரில் (‘டி–20’) கோப்பை வென்ற தமிழக அணி, விஜய் ஹசாரே தொடரில் (50 ஓவர்) பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்திருந்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?