Advertisement


சரத் கமல், மணிகா தோல்வி: உலக டேபிள் டென்னிசில்

நவம்பர் 24, 2021 22:42
 Comments  
 


World Table Tennis Championships Finals, Manika Batra, Sharath Kamal, Sathiyan Gnanasekaran, Ayhika Mukherjee, Sutirtha Mukherjee, Madhurika Patkar, Anthony Amalraj, Harmeet Desai
 

ஹாஸ்டன்: உலக டேபிள் டென்னிஸ் முதல் சுற்றில் இந்தியாவின் சரத் கமல், மணிகா, அந்தோணி அமல்ராஜ் உள்ளிட்டோர் தோல்வியடைந்தனர். சத்யன், அய்ஹிகா முகர்ஜி வெற்றி பெற்றனர்.

அமெரிக்காவில், உலக டேபிள் டென்னிஸ் பைனல்ஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அஜந்தா சரத் கமல், பெல்ஜியத்தின் செட்ரிக் நுய்டிங்க் மோதினர். இதில் சரத் கமல் 1–4 (11–9, 5–11, 6–11, 9–11) என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

 

மற்றொரு போட்டியில் இந்தியாவின் சத்யன் ஞானசேகரா 4–0 (11–2, 11–9, 11–4, 11–3) என, உக்ரைனின் யாரேஸ்லவ் ஜமுடென்கோவை வீழ்த்தினார். மற்ற முதல் சுற்று போட்டிகளில் இந்தியாவின் அந்தோணி அமல்ராஜ், ஹர்மீத் தேசாய் தோல்வியடைந்தனர்.

 

பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா, பிரேசிலின் புரூனா டகாஹஷி மோதினர். இதில் மணிகா 3–4 (11–5, 15–13, 8–11, 4–11, 6–11, 11–4, 7–11) என போராடி தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் அய்ஹிகா முகர்ஜி 4–2 (11–7, 14–16, 8–11, 11–6, 11–9, 11–6) என, எகிப்தின் பராஹ் அப்தெல்–அஜிசை வீழ்த்தினார்.

 

மற்ற போட்டிகளில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி, மதுரிகா பட்கர் தோல்வியடைந்தனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?