Advertisement


உலக ஹாக்கி: சஞ்சய் ‘ஹாட்ரிக்’ * இந்திய அணி ஏமாற்றம்

நவம்பர் 24, 2021 22:39
 Comments  
 


Sanjay hat trick goes in vain as France, India Jr Hockey World Cup
 

புவனேஸ்வர்: ‘ஜூனியர்’ உலக கோப்பை ஹாக்கி தொடர் லீக் போட்டியில் இந்திய அணி 4–5 என்ற கோல் கணக்கில் பிரான்சிடம் தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் சஞ்சய் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்து உதவினார்.

இந்தியாவின் புவனேஸ்வரில் ‘ஜூனியர்’ உலக கோப்பை ஹாக்கி தொடர் நேற்று துவங்கியது. இந்தியா, பாகிஸ்தான் உட்பட 16 அணிகள் பங்கேற்கின்றன. ‘நடப்பு சாம்பியன்’ இந்திய அணி, பிரான்ஸ், கனடா, போலந்துடன் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

நேற்று தனது முதல் போட்டியில் பிரான்சை சந்தித்தது. போட்டி துவங்கிய முதல் நிமிடத்தில் பிரான்ஸ் அணி கேப்டன் கிளமன்ட் முதல் கோல் அடித்தார். 7 வது நிமிடத்தில் பெஞ்சமின் ஒரு கோல் அடிக்க பிரான்ஸ் 2–0 என முன்னிலை பெற்றது. இந்தியாவுக்கு 10வது நிமிடம் உத்தம் சிங் ஒரு கோல் அடித்து உதவினார். 15வது நிமிடம் கிடைத்த ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பில் சஞ்சய் ஒரு கோல் அடிக்க ஸ்கோர் 2–2 என சமன் ஆனது.

23வது நிமிடம் கிளமன்ட், தனது 2வது கோல் அடிக்க, முதல் பாதியில் பிரான்ஸ் அணி 3–2 என முந்தியது. மீண்டும் மிரட்டிய கிளமன்ட், 32வது நிமிடம் சாதித்து, ‘ஹாட்ரிக்’ கோல் அடித்து அசத்தினார். தொடர்ந்து மிரட்டிய பிரான்ஸ் அணிக்கு 48 வது நிமிடம் கோரன்டின் ஒரு கோல் அடித்து உதவினார்.

சஞ்சய் அபாரம்

57, 58 வது நிமிடம் இந்தியாவுக்கு கிடைத்த ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பில் கலக்கிய சஞ்சய், தன் பங்கிற்கு ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தார். இருப்பினும் இந்திய அணி 4–5 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இன்று தனது இரண்டாவது போட்டியில் இந்திய அணி, கனடாவை சந்திக்கிறது.

 

 

நேற்று நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் பெல்ஜியம் அணி 5–1 என்ற கோல் கணக்கில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. இதே பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் மலேசிய அணி 2–1 என சிலியை வென்றது.

* ‘பி’ பிரிவில் நடந்த மற்றொரு லீக் போட்டியில் போலந்து அணி 1–0 என்ற கணக்கில் கனடாவை சாய்த்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?