Advertisement


இரண்டாவது சுற்றில் சிந்து: இந்தோனேஷிய பாட்மின்டனில்

நவம்பர் 24, 2021 21:46
 Comments  
 


Indonesia Open Super 1000 Badminton, Sindhu, Sai Praneeth, Kidmabi Srikanth
 

பாலி: இந்தோனேஷிய ஓபன் பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, ஸ்ரீகாந்த், சாய் பிரனீத் முன்னேறினர்.

இந்தோனேஷியாவில், சர்வதேச ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, ஜப்பானின் அயா ஒஹோரி மோதினர். முதல் செட்டை 17–21 என இழந்த சிந்து, பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 21–17 எனக் கைப்பற்றி பதிலடி தந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் மீண்டும் அசத்திய இவர், 21–17 என தன்வசப்படுத்தினார். ஒரு மணி நேரம், 10 நிமிடம் நீடித்த போட்டியில் சிந்து 17–21, 21–17, 21–17 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார்.

 

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாய் பிரனீத் 21–19, 21–18 என, பிரான்சின் டோமா ஜூனியர் போபோவை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21–15, 19–21, 21–12 என, சகவீரர் பிரனாயை தோற்கடித்தார்.

 

கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா, சிக்கி ரெட்டி ஜோடி 7–21, 12–21 என, ஜப்பானின் யமாஷிடா, நரு ஷினோயா ஜோடியிடம் வீழ்ந்தது. மற்றொரு போட்டியில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா, சுமீத் ரெட்டி ஜோடி 24–22, 12–21, 19–21 என, ஜப்பானின் டகுரோ ஹோகி, நமி மட்சுயமா ஜோடியிடம் போராடி தோல்வியடைந்தது.

 

பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா, சிக்கி ரெட்டி ஜோடி 27–29, 18–21 என, பல்கேரியாவின் கேப்ரிலா, ஸ்டெபானி ஸ்டோவா ஜோடியிடம் தோல்வியடைந்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?