Advertisement


இந்தியாவில் ‘உலக’ ஹாக்கி திருவிழா *சாதிப்பரா இளம் வீரர்கள்

நவம்பர் 23, 2021 23:10
 Comments  
 


Kalinga Stadium, Bhubaneswar, India, hockey world cup
 

புவனேஸ்வர்: இந்தியாவில் ‘ஜூனியர்’ உலக கோப்பை ஹாக்கி தொடர் இன்று துவங்குகிறது. முதல் போட்டியில் இந்திய அணி, பிரான்சை சந்திக்கிறது. 

இந்தியாவின் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில், ‘ஜூனியர்’ உலக கோப்பை ஹாக்கி தொடர் இன்று துவங்குகிறது. டிச. 5 வரை நடக்கும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட 16 அணிகள் பங்கேற்கின்றன. இவைகள் தலா 4 அணிகள் கொண்ட நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் முதலில் லீக் முறையில் நடக்கும். 

ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடம் பெறும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். இதில் சாதிக்கும் அணி டிச. 3ல் நடக்கும் அரையிறுதியில் மோதும். டிச. 4ல் பைனல் நடக்கவுள்ளது. 

மீண்டும் சாதிக்குமா

‘நடப்பு சாம்பியன்’ இந்திய அணி, பிரான்ஸ், கனடா, போலந்துடன் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்திய அணி இன்று தனது முதல் போட்டியில் பிரான்சை சந்திக்கிறது. அடுத்து நாளை கனடா, பின் போலந்து (நவ. 26) அணிகளை சந்திக்கவுள்ளது. கடந்த 2016ல் லக்னோவில் நடந்த தொடரில் சாதித்த இந்திய இளம் படை, உலக கோப்பை வென்று அசத்தியது. 

இம்முறை முன்கள வீரர்கள் உத்தம் சிங், மன்ஜீத், சிர்மாகோவுடன் திவாரி, சஞ்சய் உள்ளிட்ட வீரர்கள் கைகொடுக்கும் பட்சத்தில் இரண்டாவது முறையாக கோப்பை வெல்ல முயற்சிக்கலாம். 

பாக்., எங்கே

பெரிதும் எதிர்பார்க்கப்படும் பாகிஸ்தான் அணி, ஜெர்மனி, அர்ஜென்டினா, எகிப்து என வலுவான அணிகளுடன் ‘டி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் கொரோனா போக்குவரத்து சிக்கலால் விலகிக் கொண்டன. இதற்குப் பதில் அமெரிக்கா, கனடா, போலந்து அணிகள் சேர்க்கப்பட்டன. 


ரசிகர்களுக்கு ‘நோ’

உலக கோப்பை ஹாக்கியில் அனைத்து போட்டிகளும் புவனேஸ்வர் கலிங்கா மைதானத்தில் நடக்கும். கொரோனா காரணமாக ரசிகர்கள் போட்டிகளைக் காண அனுமதி தரப்படவில்லை. 

* லீக் முதல் பைனல் வரை மொத்தம் 48 போட்டிகள் நடக்கவுள்ளன. ‘டிவி’ நேரடி ஒளிபரப்பு இல்லை. 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?