Advertisement


காலிறுதியில் இந்திய ஜோடி

நவம்பர் 23, 2021 22:03
 Comments  
 


ITF Tennis, india, divij sharan sriram balaji
 

மனாமா: சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு இந்திய ஜோடி முன்னேறியது. 

பஹ்ரைனின் மனாமா நகரில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் திவிஜ் சரண், ஸ்ரீராம் பாலாஜி ஜோடி, பஹ்ரைனின் ஹசன், அப்துல்கரிம் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை இந்திய ஜோடி 6–1 என வென்றது. தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் அசத்திய இந்திய ஜோடி 6–0 என எளிதாக வசப்படுத்தியது. 

முடிவில் திவிஜ் சரண், ஸ்ரீராம் பாலாஜி ஜோடி, 6–1, 6–0 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது. 

ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் குன்னேஸ்வரன், துருக்கியின் யாங்கி எரேலை சந்தித்தார். முதல் செட்டை குன்னேஸ்வரன் 3–6 என இழந்தார். அடுத்த செட்டிலும் ஏமாற்றிய இவர் 3–6 என நழுவவிட்டார். முடிவில் குன்னேஸ்வரன் 3–6, 3–6 என்ற நேர் செட்கணக்கில் தோல்வியடைந்தார். 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?