Advertisement


சாதிக்குமா நம்ம சென்னை * ஐ.எஸ்.எல்., கால்பந்தில் முதல் சவால்

நவம்பர் 22, 2021 22:31
 Comments  
 


ISL, Chennaiyin FC face Hyderabad FC
 

கோவா: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் சென்னை அணி தனது முதல் போட்டியில் இன்று ஐதராபாத்தை சந்திக்கிறது. 

இந்தியாவின் கோவாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் 8 வது சீசன் நடக்கிறது. இன்று பம்போலிம் மைதானத்தில் நடக்கும் லீக் போட்டியில் சென்னை அணி தனது முதல் மோதலில் ஐதராபாத்தை எதிர்கொள்கிறது. 

ஐ.எஸ்.எல்., தொடரில் சென்னை அணி (2015, 2017–2018), இருமுறை கோப்பை வென்றது. 4 முறை அரையிறுதிக்கு  முன்னேறியது. ஆனால் கடந்த 7வது சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணி, பங்கேற்ற 20 போட்டிகளில் 3ல் மட்டும் வென்றது. 11 போட்டிகளை ‘டிரா’ செய்ய, மொத்தம் 17 கோல் மட்டும் அடித்து புள்ளிப்பட்டியலில் 8வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

எல்லாம் புதுசு

இம்முறை புதிய கேப்டனாக இளம் வீரர் அனிருத் தபா 23,  புதிய பயிற்சியாளர் பாண்டோவிச், 5 புதிய அன்னிய வீரர்கள் என சென்னை அணி ஒட்டுமொத்தமாக புத்துணர்ச்சியுடன் களமிறங்குகிறது. 

சாங்டே, ஜாபி ஜஸ்டின், ரஹிம் அலி என இந்திய வீரர்கள் தாக்குதல் பணியில் ஈடுபட உள்ளது நம்பிக்கை தருகிறது. போலந்தின் போலந்தின் லுகாஸ் ஜிகைவிஸ் (200 போட்டி, 49 கோல், 21 முறை கோல் அடிக்க உதவி), முகமது லியாக்கத் கூட்டணி சாதிக்கும் பட்சத்தில் தொடரை இன்று வெற்றியுடன் துவக்கலாம். 

ஐதராபாத் எப்படி

ஐதராபாத் அணி கடந்த சீசனில் 2 புள்ளி வித்தியாசத்தில் 5 வது இடம் பிடித்து, ‘பிளே ஆப்’ வாய்ப்பை இழந்தது. இம்முறை மும்பை அணியில் இருந்து வந்து இணைந்துள்ள ஆக்பெசே, எடு கார்சியா, ஜுவானன் இணைந்து அணியின் வெற்றிக்கு கைகொடுக்க காத்திருக்கின்றனர். 

 

சம பலத்தில்...

சென்னை, ஐதராபாத் அணிகள் இதுவரை 4 போட்டிகளில் மோதின. இதில் இரு அணிகளும் தலா 2 வெற்றி பெற்றன. கடைசியாக மோதிய 2 போட்டிகளிலும் ஐதராபாத் வென்றது.

* இரு அணிகள் மோதிய 4 போட்டிகளில் சென்னை 6, ஐதராபாத் 8 கோல் அடித்தன. 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?