Advertisement


சீன வீராங்கனை நலம்: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி

நவம்பர் 22, 2021 22:07
 Comments  
 


Peng Shuai, China, Tennis, International Olympic Committee
 

பீஜிங்: சீனாவின் பெங் ஷூவாய் பாதுகாப்பாகவும், நலமுடனும் இருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷூவாய் 35. விம்பிள்டன் (2013), பிரெஞ்ச் ஓபன் (2014) கிராண்ட்ஸ்லாம் இரட்டையரில் கோப்பை வென்ற இவர், ‘நம்பர்–1’ வீராங்கனையாக திகழ்ந்தார். சமீபத்தில் சீன முன்னாள் துணை அதிபர் ஜங் காவோலிக்கு எதிராக பாலியல் புகார் தெரிவித்தார். இதற்கு, ஜங் காவோலி, சீன அரசு எதுவும் தெரிவிக்கவில்லை. அடுத்த சில நாட்களில் பெங் ஷூவாய் காணாமல் போனார். இவர் எங்கு உள்ளார் என யாருக்கும் தெரியவில்லை. இதற்கு டென்னிஸ் நட்சத்திரங்கள், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி என பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பின. அதன்பின் இவர், வீட்டில் இருப்பது போன்ற புகைப்படமும், பீஜிங் நகரில் நடந்த யூத் டென்னிஸ் தொடரில் சிறுவர்களுக்கு ‘ஆட்டோகிராப்’ வழங்கிய வீடியோவும் வெளியானது.

 

இந்நிலையில் பெங் ஷூவாய், ‘வீடியோ கால்’ வழியாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி.,) தலைவர் தாமஸ் பாச், விளையாட்டு நட்சத்திரங்கள் கமிஷன் தலைவர் எம்மா டெர்ஹோ, ஐ.ஓ.சி., நிர்வாகிகளுடன் பேசியுள்ளார்.

 

இதுகுறித்து ஐ.ஓ.சி., வெளியிட்ட அறிக்கையில், ‘‘சீனாவின் பெங் ஷூவாய், தன் மீது அக்கறை காட்டியதற்கு ஐ.ஓ.சி.,க்கு நன்றி கூறினார். தற்போது பீஜிங்கில் உள்ள அவரது வீட்டில் பாதுகாப்பாகவும், நலமுடனும் இருப்பதாக தெரிவித்தார். இந்த நேரத்தில் குடும்பத்தினருடன், நண்பர்களுடன் மட்டும் நேரத்தை செலவிட விரும்புகிறார்’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?