Advertisement


ஷாருக் ‘சிக்சர்’...தமிழகம் ‘சூப்பர்’: கோப்பை வென்று அசத்தல்

நவம்பர் 22, 2021 21:51
 Comments  
 


Syed Mushtaq Ali Trophy, T20 Cricket, Tamil Nadu, Champion
 

புதுடில்லி: பரபரப்பான பைனலின் கடைசி பந்தில் ஷாருக்கான் சிக்சர் விளாச, தமிழக அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. முஷ்டாக் அலி டிராபியை மீண்டும் கைப்பற்றியது.  

உள்ளூர் ‘டி–20’ தொடரான சையது முஷ்டாக் அலி டிராபி 13வது சீசன் நடந்தது. டில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த பைனலில் தமிழகம், கர்நாடகா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற தமிழக அணி கேப்டன் விஜய் சங்கர், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

 

கிஷோர் அசத்தல்: கர்நாடகா அணிக்கு சாய் கிஷோர் தொல்லை தந்தார். இவரது ‘சுழலில்’ ரோகன் கடாம் (0), கேப்டன் மணிஷ் பாண்டே (13), ஷரத் (16) சிக்கினர். கருண் நாயர் (18) நிலைக்கவில்லை. அபினவ் மனோகர் (46), பிரவீன் துபே (33) கைகொடுத்தனர். ஜெகதீஷா சுசித் (18) ஆறுதல் தந்தார். கர்நாடகா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 151 ரன் எடுத்தது. தமிழகம் சார்பில் சாய் கிஷோர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

 

ஷாருக்கான் கலக்கல்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய தமிழக அணிக்கு ஹரி நிஷாந்த் (23) நல்ல துவக்கம் தந்தார். சாய் சுதர்சன் (9), கேப்டன் விஜய் சங்கர் (18)  சோபிக்கவில்லை. நாராயண் ஜெகதீசன் (41) நம்பிக்கை தந்தார். 

 கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன் தேவைப்பட்டன. பிரதீக் ஜெயின் வீசிய இந்த ஓவரின் முதல் 5 பந்தில் 12 ரன் கிடைத்தன. கடைசி பந்தில் 5 ரன் தேவைப்பட்ட நிலையில், ஷாருக்கான் சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

 

தமிழக அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 153 ரன் எடுத்து வெற்றி பெற்று, நடப்பு சாம்பியன் அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டது. ஷாருக்கான் (33), சாய் கிஷோர் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

மூன்றாவது முறை

சையது முஷ்டாக் அலி தொடரில் தமிழக அணி 3 முறையாக (2006–07, 2020–21, 2021–22) கோப்பை வென்றது. இத்தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தது.

 

சரியான பதிலடி

கடந்த 2019–20ல் நடந்த சையது முஷ்டாக் அலி டிராபி பைனலில் கர்நாடகா அணி, தமிழகத்தை வீழ்த்தியது. இத்தோல்விக்கு நேற்று, தமிழக அணி சரியான பதிலடி தந்தது. 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?