Advertisement


பைனலில் தமிழகம்–கர்நாடகா: சையது முஷ்டாக் டிராபியில்

நவம்பர் 20, 2021 21:54
 Comments  
 


Syed Mushtaq Ali T20 Trophy, Cricket, Tamil Nadu, Hyderabad, Semi Final
 

புதுடில்லி: சையது முஷ்டாக் அலி டிராபி பைனலுக்கு தமிழகம், கர்நாடகா அணிகள் முன்னேறின. அரையிறுதியில் தமிழக அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் உள்ளூர் ‘டி–20’ தொடரான சையது முஷ்டாக் அலி டிராபி 13வது சீசன் நடக்கிறது. டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த முதல் அரையிறுதியில் ‘நடப்பு சாம்பியன்’ தமிழகம், ஐதராபாத் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற தமிழக அணி கேப்டன் விஜய் சங்கர், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

 

விக்கெட் ‘மடமட’: ஐதராபாத் அணிக்கு சரவண குமார் தொல்லை தந்தார். இவரது ‘வேகத்தில்’ கேப்டன் தன்மே அகர்வால் (1), திலக் வர்மா (8), ஹிமாலய் அகர்வால் (0), பிரக்னய் ரெட்டி (8) வெளியேறினர். முருகன் அஷ்வின் ‘சுழலில்’ பாவனகா சந்தீப் (8), சமா மிலிந்த் (8) சிக்கினர். சாய் கிஷோர் பந்தில் ராகுல் புத்தீ (9) அவுட்டானார். முகமது ‘வேகத்தில்’ ரவி தேஜா (9), மெஹ்தி ஹசன் (3) சரணடைந்தனர். பொறுப்பாக ஆடிய தனய் தியாகராஜன் (25), சரவண குமார் பந்தில் ஆட்டமிழந்தார்.

ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 90 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. தமிழகம் சார்பில் சரவண குமார் 5, முருகன் அஷ்வின், முகமது தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

 

விஜய் விளாசல்: சுலப இலக்கை விரட்டிய தமிழக அணிக்கு நாராயண் ஜெகதீசன் (1), ஹரி நிஷாந்த் (14) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. பின் இணைந்த சாய் சுதர்சன், கேப்டன் விஜய் சங்கர் ஜோடி ஐதராபாத் பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. ரக்சன் ரெட்டி பந்தில் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய விஜய் சங்கர் வெற்றியை உறுதி செய்தார்.

 

தமிழக அணி 14.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 92 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சுதர்சன் (34), விஜய் சங்கர் (43) அவுட்டாகாமல் இருந்தனர். இதன்மூலம் தமிழக அணி 4வது முறையாக (2006–07, 2019–20, 2020–21, 2021–22) இத்தொடரின் பைனலுக்குள் நுழைந்தது. முன்னதாக விளையாடிய 3 பைனலில், 2ல் வென்ற (2006–07, 2020–21) தமிழக அணி, ஒரு முறை (2019–20) தோல்வியடைந்தது.

 

கர்நாடகாவுடன் மோதல்

மற்றொரு அரையிறுதியில் கர்நாடகா அணி (176/7, 20 ஓவர்) 4 ரன் வித்தியாசத்தில் விதர்பா அணியை (172/6, 20 ஓவர்) வீழ்த்தி 3வது முறையாக (2018–19, 2019–20, 2021–22) பைனலுக்கு முன்னேறியது. நாளை, டில்லியில் நடக்கவுள்ள பைனலில் தமிழகம், கர்நாடகா அணிகள் மோதுகின்றன. கடந்த 2019–20ல் நடந்த பைனலில் தமிழக அணி, கர்நாடகாவிடம் தோல்வியடைந்தது. இதற்கு இம்முறை பதிலடி தர முயற்சிக்கலாம்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?