Advertisement


பாண்ட்யா ‘வாட்ச்’ ரூ. 5 கோடியா

நவம்பர் 16, 2021 22:46
 Comments  
 


Hardik Pandya Rs 5 Crore Watch Seized By Airport Customs
 

மும்பை: ஹர்திக் பாண்ட்யாவின் ஆடம்பர ‘வாட்ச்’ விலை ரூ. 5 கோடியா என சர்ச்சை எழுந்துள்ளது. 

இந்திய அணியின் ‘ஆல்–ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா. சமீபத்தில் எமிரேட்சில் நடந்த ‘டி–20’ உலக கோப்பை தொடரில் பங்கேற்றார். இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறாததால், ஹர்திக் உள்ளிட்ட நமது வீரர்கள் விரைவாக தாயகம் திரும்பினர். மும்பை விமான நிலையம் வந்த ஹர்திக்கிடம் இரண்டு ‘காஸ்ட்லி’ வாட்ச்(கைக்கடிகாரம்) இருப்பதை சுங்க துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். ‘பில்’ தொகைக்கும் வாட்ச்சின் உண்மையான மதிப்புக்கும் வித்தியாசம் இருந்துள்ளது. ரூ. 5 கோடி மதிப்பிலான இந்த வாட்ச்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக செய்திகள் வெளியாகின. 

இதனை மறுத்த ஹர்திக் பாண்ட்யா கூறுகையில்,‘‘கடந்த நவ.15 காலையில் மும்பை விமான நிலையம் வந்தேன். துபாயில் வாங்கிய அனைத்து பொருட்களின் விபரத்தை நானே முன் வந்து சுங்க துறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தேன். உரிய வரி செலுத்த தயாராக இருப்பதாக உறுதி அளித்தேன். எனது பொருட்களின் மதிப்பை அதிகாரிகள் மதிப்பீடு செய்கின்றனர். சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்ற முறையில் அரசு துறைகளை மதிக்கிறேன். மும்பை சுங்க துறை அதிகாரிகள் எனக்கு ஒத்துழைப்பு அளித்தனர். நானும் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளித்தேன். அவர்களுக்கு தேவைப்படும் கூடுதல் ஆதாரங்களை சமர்ப்பிக்க தயாராக உள்ளேன். சட்டத்தை மீறி செயல்படுவதாக என் மீது கூறப்படும் புகார்கள் தவறானவை. நான் கொண்டு வந்த வாட்ச் மதிப்பு ரூ. 5 கோடி என தவறாக வதந்தி பரப்புகின்றனர். இதன் மதிப்பு தோராயமாக ரூ. 1.5 கோடி தான்,’’ என்றார்.

 

என்ன ‘ஸ்பெஷல்’

பாண்ட்யா கொண்டு வந்தது சுவிட்சர்லாந்தின் ‘பாடேக் பிலிப் நவுடிலஸ் பிளாட்டினம் 5711’ ஸ்போர்ட்ஸ் ரக வாட்ச். இணையதளத்தில் இதன் மதிப்பு ரூ. 5.7 கோடி. ‘ஷிப்பிங்’ கட்டணமே ரூ. 38,000. நேரத்தை காண்பிக்கும் பகுதிகள், டயலை சுற்றி 32 பகுட்டி கட் பச்சை நிற மரகத கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. டார்க் கிரே கலரில் டயல், தண்ணீர் புகாத அமைப்பு கூடுதல் சிறப்பு. பிரேஸ்லட், கேஸ் என அனைத்தும் விலை உயர்ந்த பிளாட்டினத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்க காமெடி நடிகர் கெவின் ஹார்ட், கனடா ராப் பாடகர் டிரேக் என உலகில் சில பிரபலங்களிடம் மட்டுமே இந்த ஆடம்பர வாட்ச் உள்ளது.

 

‘பலே’ சகோதரர்கள்

கடந்த ஆண்டு மும்பை விமான நிலையத்தில் ஹர்திக் பாண்ட்யாவின் சகோதரர் குர்ணால் சிக்கினார். அப்போது ரோலக்ஸ் வாட்ச்கள், தங்கம், ஹர்திக்கின் இரு வாட்ச் என ரூ. 75 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொண்டு வந்தார். தற்போது ஹர்திக்கும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?