Advertisement


தப்பிய இந்திய நட்சத்திரங்கள் * உகாண்டாவில் குண்டு வெடிப்பு

நவம்பர் 16, 2021 22:41
 Comments  
 


Indian para shuttlers in Uganda witness twin blasts near team hotel
 

கம்பளா: உகாண்டாவில் இந்திய பாரா பாட்மின்டன் நட்சத்திரங்கள் தங்கியுள்ள ஓட்டலுக்கு அருகே இரட்டை குண்டு வெடித்தது. 

உகாண்டாவின் கம்பளா நகரில் உலக பாரா பாட்மின்டன் சர்வதேச தொடர் நடக்கிறது. டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற பிரமோத் பகத், வெள்ளி வென்ற மனோஜ் சர்கார், வீராங்கனை மானசி உட்பட இந்திய நட்சத்திரங்கள் சில நாட்களுக்கு முன் மத்திய உகாண்டா சென்றனர். இங்குள்ள கம்பளா ஓட்டலில் தங்கியுள்ளனர். 

நேற்று காலை இந்திய நட்சத்திரங்கள் தங்கியுள்ள ஓட்டலுக்கு வெளியே 100 மீ., துாரத்தில் இரண்டு குண்டுகள் வெடித்தன. அங்கிருந்து கார்கள் தீப்பிடித்து எரிந்தன. இதில் குறைந்தது 2 பேருக்கும் மேல் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. சம்பவம் நடந்த போது இந்திய நட்சத்திரங்கள் ஓட்டலில் தான் தங்கியிருந்தனர். இவர்கள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. 

இதுதொடர்பான வீடியோ இந்திய விளையாட்டு ஆணையம் வெளியிட்டது. 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?