Advertisement


ஆசிய வில்வித்தை: பைனலில் இந்தியா

நவம்பர் 16, 2021 22:14
 Comments  
 


Indian archers confirm three medals, in all finals
 

தாகா: ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி பைனலுக்கு இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் முன்னேறின. 

வங்கதேசத்தின் தாகாவில் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்கள் ரீகர்வ் பிரிவு காலிறுதியில் கபில், பிரவின் ஜாதவ், சாலுங்கே அடங்கிய இந்திய அணி, காலிறுதியில் சவுதி அரேபியாவை 6–0 என வென்றது. அடுத்து நடந்த அரையிறுதியில் இந்திய அணி, வங்கதேசத்தை சந்தித்தது. 

இதன் முதல் செட் 1–1 என சமன் ஆனது. இரண்டாவது செட்டை வங்கதேசம் வெல்ல, மூன்றாவது செட் மீண்டும் சமன் ஆனது. பின் எழுச்சி பெற்ற இந்தியா 4, 5 வது செட்டுகளை கைப்பற்றி பதிலடி கொடுத்தது. பின் ‘ஷூட் ஆப்’ முறையில் இந்தியா 5–4 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது. இதில் தென் கொரியாவை சந்திக்கிறது. 

பெண்கள் அபாரம்

பெண்களுக்கான ‘ரீகர்வ்’ பிரிவில் அங்கிதா, மது, ரிதி அடங்கிய இந்திய அணி, நேரடியாக அரையிறுதியில் பங்கேற்றது. இதில் வியட்நாம் அணியை 6–0 என்ற கணக்கில் வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது. இதில் தென் கொரியாவுடன் மோதவுள்ளது. 

காம்பவுண்டு கலப்பு அணிகள் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஜோதி, ரிஷாப் ஜோடி, 156–154 என்ற கணக்கில் கஜகஸ்தான் ஜோடியை வென்று பைனலுக்கு முன்னேறியது. 

காம்பவுண்டு ஆண்கள் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அபிஷேக், ரிஷாப், அமன் அடங்கிய அணி 229–230 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் வங்கதேசத்தை சந்திக்கிறது.

காம்பவுண்டு பெண்கள் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஜோதி, பர்னீத், பிரியா அடங்கிய அணி, ஈரானிடம் தோற்றது. வெண்கலப்பதக்கத்துக்காக கஜகஸ்தானை சந்திக்கவுள்ளது. 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?