Advertisement


ஆமிருக்கு ஹர்பஜன் சிங் பதிலடி

அக்டோபர் 27, 2021 22:17
 Comments  
 


Harbhajan Singh and Mohammad Amir were engaged in a war of words on Twitter
 

புதுடில்லி: இந்திய அணியின் தோல்வியை கிண்டல் செய்த முகமது ஆமிருக்கு ஹர்பஜன் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.

‘டி–20’ உலக கோப்பை லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் நடக்கின்றன. பாகிஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர், இந்திய அணியின் தோல்விடைய கிண்டல் செய்யும் வகையில் ‘டுவிட்டரில்’ செய்தி வெளியிட்டார்.

இதைப் பார்த்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், 2010 ஆசிய கோப்பை போட்டியில் ஆமிர் பந்தில், தான் சிக்சர் அடித்து வெற்றி பெறச் செய்த வீடியோவை பதிவிட்டார். உடனே, 2006 ல் நடந்த டெஸ்டில் ஹர்பஜன் ஓவரில் அப்ரிதி 4 பந்தில் 4 சிக்சர் அடித்த வீடியோவை வெளியிட்டு, இது எப்படி நடந்தது என கேலி செய்து ஆமிர் ‘டுவிட்டர்’ வெளியிட்டார்.

இதனால் கோபமடைந்த ஹர்பஜன், 2010ல் லார்ட்ஸ் டெஸ்டில் பாகிஸ்தான் வீரர்கள் ‘பிக்சிங்’ செய்ததை குறிப்பிட்டார். அதில் முகமது ஆமிர் கிரீசிற்கு வெளியே கால் வைத்து வீசிய ‘நோ பால்’ போட்டோவை வெளியிட்ட ஹர்பஜன்,‘ லார்ட்சில் இப்படி ‘நோ பால்’ வீசியது எப்படி நடந்தது, இதற்கு யார் எவ்வளவு பணம் கொடுத்தனர்,’ என கேட்டார்.

இதுகுறித்து ஹர்பஜன் கூறுகையில்,‘‘ ஆமிர் என்பவர் யார், அவருக்கு என்னத் தகுதி உள்ளது. லார்ட்ஸ் டெஸ்டில் ‘பிக்சிங்’ செய்து சொந்த நாட்டுக்கு எதிராக செயல்பட்டவர். இந்தியா–பாகிஸ்தான் போட்டி குறித்து அளவுக்கு அதிகமாக பேசி வருகிறார். சோயப் அக்தரும் நானும் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தோம். ஆமிர் தான் தேவையில்லாமல் உள்ளே வந்தார். இவருக்கு சரியான பதிலடி கொடுத்தேன்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?