Advertisement


வங்கத்தை வென்றது இங்கிலாந்து * அரைசதம் விளாசினார் ஜேசன் ராய்

அக்டோபர் 27, 2021 21:40
 Comments  
 


IPL 2021, T 20 World cup, england vs bangladesh
 

அபுதாபி: ‘டி–20’ உலக கோப்பை லீக் போட்டியில் ஜேசன் ராய் அரைசதம் கைகொடுக்க, இங்கிலாந்து அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்றது.

எமிரேட்சில் ‘டி–20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் ‘குரூப் 1’ பிரிவு லீக் போட்டியில் நேற்று இங்கிலாந்து, வங்கதேச அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி கேப்டன் மகமதுல்லா, பேட்டிங் தேர்வு செய்தார்.

வங்கதேச அணியில் டஸ்கின் அகமதுவுக்குப் பதில் ஷோரிபுல் இஸ்லாம் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

மில்ஸ் அபாரம்

வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ், முகமது நயீம் ஜோடி துவக்கம் கொடுத்தது. மொயீன் அலி வீசிய முதல் ஓவரில் லிட்டன் தாஸ் 2 பவுண்டரி அடிக்க வங்கதேச அணி 10 ரன் எடுத்தது. இதன் பின் அவ்வளவு தான். அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுக்கத் துவங்கியது. மொயீன் அலியின் 2வது ஓவரில் லிட்டன் தாஸ் (9), நயீம் (5) அடுத்தடுத்த பந்துகளில் வெளியேறினர். அனுபவ வீரர் சாகிப் அல் ஹசன் 4 ரன்னுக்கு அவுட்டானார்.

முஷ்பிகுர் 29 ரன் எடுத்தார். ஆபிப் (5), மகமதுல்லா (19) நீடிக்கவில்லை. ‘வேகத்தில்’ மிரட்டிய மில்சிடம், மெஹதி ஹசன் (11) சரண் அடைந்தார். மில்சின் கடைசி ஓவரில் நுாருல் ஹசன் (16), முஸ்தபிஜூர் (0) அவுட்டானாகினர். வங்கதேச அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 124 ரன் மட்டும் எடுத்தது. நசும் அகமது (19) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்தின் மில்ஸ் 3, லிவிங்ஸ்டன் 2 விக்கெட் வீழ்த்தினர்.

ராய் அரைசதம்

எளிய இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணிக்கு பட்லர், ஜேசன் ராய் ஜோடி துவக்கம் கொடுத்தது. முஸ்தபிஜூர் ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரி அடித்தார் ராய். சாகிப் பந்தில் சிக்சர் விளாசிய பட்லர் 18 ரன்னுக்கு கிளம்பினார். அடுத்து வந்த டேவிட் மலான் தன் பங்கிற்கு பவுண்டரிகளாக அடிக்க, 10 ஓவரில் 90/1 ரன் குவித்தது இங்கிலாந்து. ஜேசன் ராய் 38 பந்தில் 61 ரன் குவித்து வெளியேறினார். இங்கிலாந்து அணி 14.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 126 ரன் எடுத்து 8 விக்கெட்டில் வெற்றி பெற்றது. மலான் (28), பேர்ஸ்டோவ் (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?