Advertisement


ரொனால்டோ ‘ஹாட்ரிக்’: போர்ச்சுகல் வெற்றி

அக்டோபர் 13, 2021 21:20
 Comments  
 


FIFA World Cup 2022, Soccer, Europe Qualification, Ronaldo, Portugal
 

பாரிஸ்: உலக கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் ரொனால்டோ ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்க போர்ச்சுகல் அணி 5–0 என, லக்சம்பர்க் அணியை வீழ்த்தியது.

கத்தார் தலைநகர் தோகாவில், அடுத்த ஆண்டு (நவ. 21 – டிச. 18) ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கவுள்ளது. இதற்கான ஐரோப்பிய அணிகள் பங்கேற்கும் தகுதிச் சுற்று நடக்கிறது. இதில் 13 இடங்களுக்கு மொத்தம் 55 அணிகள் 10 பிரிவுகளாக விளையாடுகின்றன. முதல் அணியாக ஜெர்மனி தகுதி பெற்றது.

 

போர்ச்சுகலில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் லக்சம்பர்க், போர்ச்சுகல் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய போர்ச்சுகல் அணி 5–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. போர்ச்சுகல் சார்பில் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ ‘ஹாட்ரிக்’ கோல் (8, 13, 87வது நிமிடம்) அடித்தார். பெர்ணான்டஸ் (18வது), பால்ஹின்ஹா (69வது) தலா ஒரு கோலடித்தனர். இது, ஒட்டுமொத்த கால்பந்து அரங்கில் ரொனால்டோவின் 58வது ‘ஹாட்ரிக்’. தவிர, சர்வதேச அரங்கில் இவரது 10வது ‘ஹாட்ரிக்’ சாதனை. இதன்மூலம் சர்வதேச அரங்கில் இச்சாதனை படைத்த முதல் வீரரானார். இதுவரை 182 போட்டியில், 115 கோல் அடித்துள்ளார்.

 

டென்மார்க் தகுதி: ‘எப்’ பிரிவு போட்டியில் டென்மார்க் அணி 1–0 என, ஆஸ்திரியாவை வீழ்த்தியது. இதுவரை விளையாடிய 8 போட்டியிலும் வெற்றி பெற்ற டென்மார்க் அணி 24 புள்ளிகளுடன் முதலிடத்தை உறுதி செய்து உலக கோப்பைக்கு தகுதி பெற்றது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?