Advertisement


காலிறுதியில் இந்திய அணி * தாமஸ் பாட்மின்டனில் அபாரம்

அக்டோபர் 13, 2021 17:08
 Comments  
 


Indian shuttlers reach Thomas Cup quarterfinals with 5 0 win over Tahiti, first time since 2010
 

ஆர்ஹஸ்: தாமஸ் கோப்பை பாட்மின்டன் தொடரில் 2010க்குப் பின் இந்திய ஆண்கள் அணி காலிறுதிக்கு முன்னேறியது.

டென்மார்க்கில் தாமஸ்–உபர் கோப்பை பாட்மின்டன் நடக்கிறது. ஆண்களுக்கான தாமஸ் கோப்பை போட்டியில் இந்திய அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றது. முதல் போட்டியில் நெதர்லாந்தை 5–0 என வென்ற இந்திய அணி, தனது இரண்டாவது போட்டியில் தஹிதியை சந்தித்தது. 

ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் சாய் பிரனீத், 21–5, 21–6 என தஹிதியின் லுாயிசை வென்றார். அடுத்த ஒற்றையர் போட்டியில் சமீர் வர்மா, 21–12, 21–12 என ரெமி ரோசியை சாய்த்தார். 

மூன்றாவது ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், 21–4, 21–2 என 15 நிமிடத்தில் எலியாசை வெல்ல இந்திய அணியின் காலிறுதி வாய்ப்பு உறுதியானது. அடுத்து நடந்த ஆண்கள் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் கிருஷ்ண பிரசாத், விஷ்ணு வர்தன் ஜோடி 21–8, 21–7 என்ற நேர் செட்களில் தஹிதி ஜோடியை வீழ்த்தியது. கடைசியாக நடந்த மற்றொரு ஆண்கள் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரான்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி 21–5, 21–3 என வெற்றி பெற்றது.

ஐந்து போட்டிகள் முடிவில் இந்திய அணி 5–0 என்ற வென்றது. ஏற்கனவே நெதர்லாந்தை வென்ற இந்தியா, காலிறுதிக்கு முன்னேறியது. கடந்த 2010க்குப் பின் முதன் முறையாக தாமஸ் கோப்பை தொடரின் காலிறுதிக்கு இந்திய ஆண்கள் அணி தகுதி பெற்றது. 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?