Advertisement


‘கிங்’ கோஹ்லி 10,000 ரன்: பெங்களூரு கலக்கல் வெற்றி

செப்டம்பர் 26, 2021 22:35
 Comments  
 


IPL 2021, T20 Cricket, Mumbai, Bangalore, Virat Kohli, 10000 Runs, Harshal Patel, Hat Trick Wickets
 

துபாய்: மும்பைக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ஹர்ஷல் படேல் ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்க பெங்களூரு அணி 54 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

எமிரேட்சில், ஐ.பி.எல்., 14வது சீசன் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, ‘நடப்பு சாம்பியன்’ மும்பை அணிகள் மோதின. மும்பை அணிக்கு ஹர்திக் பாண்ட்யா திரும்பினார். பெங்களூரு அணியில் நவ்தீப் சைனி, ஹசரங்கா, டிம் டேவிட் நீக்கப்பட்டு ஷபாஸ் அகமது, டான் கிறிஸ்டியன், கைல் ஜேமிசன் தேர்வாகினர். ‘டாஸ்’ வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

 

கோஹ்லி விளாசல்: பெங்களூரு அணிக்கு சிக்சர் அடித்து ரன் கணக்கை துவக்கினார் கேப்டன் விராத் கோஹ்லி. பும்ரா ‘வேகத்தில்’ தேவ்தத் படிக்கல் (0) வெளியேறினார். தொடர்ந்து அசத்திய கோஹ்லி, பும்ரா, மில்னே வீசிய 4, 5வது ஓவரில் தலா ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ஸ்ரீகர் பரத், ராகுல் சகார் பந்தில் 2 சிக்சர் பறக்கவிட்டார். இரண்டாவது விக்கெட்டுக்கு 68 ரன் சேர்த்த போது ஸ்ரீகர் பரத் (32) அவுட்டானார்.

 

மேக்ஸ்வெல் அபாரம்: பின் இணைந்த கோஹ்லி, மேக்ஸ்வெல் ஜோடி ரன் வேட்டை நடத்தியது. குர்னால் பாண்ட்யா பந்தை சிக்சருக்கு அனுப்பிய மேக்ஸ்வெல், மில்னே வீசிய 13வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டினார். அபாரமாக ஆடிய கோஹ்லி, ஐ.பி.எல்., அரங்கில் தனது 42வது அரைசதமடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 51 ரன் சேர்த்த போது மில்னே பந்தில் கோஹ்லி (51) அவுட்டானார். பும்ரா வீசிய 17வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார் டிவிலியர்ஸ். மில்னே வீசிய 18வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்து அரைசதம் கடந்தார் மேக்ஸ்வெல். பும்ரா வீசிய 19வது ஓவரில் மேக்ஸ்வெல் (56), டிவிலியர்ஸ் (11) அடுத்தடுத்து வெளியேறினர். பவுல்ட் பந்தில் ஷபாஸ் அகமது (1) போல்டானார்.

 

பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 165 ரன் எடுத்தது. கைல் ஜேமிசன் (2), கிறிஸ்டியன் (1) அவுட்டாகாமல் இருந்தனர். மும்பை சார்பில் பும்ரா 3 விக்கெட் கைப்பற்றினார்.

 

ஹர்ஷல் கலக்கல்: சவாலான இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு குயின்டன் டி காக் (24), கேப்டன் ரோகித் (43) நல்ல துவக்கம் தந்தனர். இஷான் கிஷான் (9), சூர்யகுமார் யாதவ் (8), குர்னால் பாண்ட்யா (5) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். ஹர்ஷல் படேல் வீசிய 17வது ஓவரின் முதல் மூன்று பந்தில் ஹர்திக் பாண்ட்யா (3),  போலார்டு (7), ராகுல் சகார் (0) அவுட்டாக, ‘ஹாட்ரிக்’ சாதனை பதிவானது. சகால் ‘சுழலில்’ பும்ரா (5) போல்டானார். தொடர்ந்து அசத்திய ஹர்ஷல் பந்தில் மில்னே (0) வெளியேறினார்.

மும்பை அணி 18.1 ஓவரில் 111 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. பெங்களூரு சார்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட் கைப்பற்றினார்.

 

‘ஹாட்ரிக்’ சாதனை

‘வேகத்தில்’ அசத்திய ஹர்ஷல் படேல், ஐ.பி.எல்., அரங்கில் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த 3வது பெங்களூரு வீரரானார். ஏற்கனவே பெங்களூருவின் பிரவீண் குமார் (2010, எதிர்: ராஜஸ்தான்), சாமுவேல் பத்ரீ (2017, எதிர்: மும்பை) இச்சாதனை படைத்திருந்தனர்.

 

* இதுவரை 20 முறை ‘ஹாட்ரிக்’ விக்கெட் பதிவானது. இதில் அமித் மிஸ்ரா அதிகபட்சமாக மூன்று முறை இச்சாதனை படைத்தனர். யுவராஜ் சிங் 2, பாலாஜி, நிடினி, ரோகித் சர்மா, பிரவீண் குமார், அஜித் சண்டிலா, சுனில் நரைன், பிரவீண் தாம்பே, ஷேன் வாட்சன், அக்சர் படேல், சாமுவேல் பத்ரீ, ஆன்ட்ரூ டை, ஜெயதேவ் உனத்கட், சாம் கரான், ஸ்ரேயாஸ் கோபால், ஹர்ஷல் படேல் தலா ஒரு முறை இச்சாதனை நிகழ்த்தினர்.

 

முதல் இந்திய வீரர்

அபாரமாக ஆடிய பெங்களூரு கேப்டன் கோஹ்லி 51 ரன் விளாசினார். இவர், தனது 13வது ரன்னை கடந்த போது ‘டுவென்டி–20’ அரங்கில் 10 ஆயிரம் ரன்னை எட்டிய முதல் இந்திய வீரர், 5வது சர்வதேச வீரரானார். இதுவரை 314 போட்டியில், 5 சதம், 74 அரைசதம் உட்பட 10038 ரன் எடுத்துள்ளார். ஏற்கனவே விண்டீசின் கெய்ல் (14275 ரன்), போலார்டு (11195), பாகிஸ்தானின் சோயப் மாலிக் (10808), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (10019) இம்மைல்கல்லை எட்டினர்.

 

* கோஹ்லி, சர்வதேச ‘டுவென்டி–20’யில் 90 போட்டியில், 28 அரைசதம் உட்பட 3159 ரன் எடுத்துள்ளார். உள்ளூர், கிளப் அணிகளுக்கான ‘டுவென்டி–20’யில் 224 போட்டியில், 5 சதம், 45 அரைசதம் உட்பட 6879 ரன் எடுத்துள்ளார். இதில் ஐ.பி.எல்., அரங்கில் மட்டும் பெங்களூரு அணிக்காக 202 போட்டியில், 5 சதம், 42 அரைசதம் உட்பட 6185 ரன் குவித்துள்ளார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?