Advertisement


சென்னை கிங்ஸ் ‘திரில்’ வெற்றி: ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு தகுதி

செப்டம்பர் 26, 2021 21:55
 Comments  
 


IPL 2021, T20 Cricket, Kolkata, Chennai Kings, Play Off Qualified
 

அபுதாபி: பரபரப்பான ஐ.பி.எல்., போட்டியில் ரவிந்திர ஜடேஜாவின் விளாசல் கைகொடுக்க, சென்னை அணி கடைசி பந்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. ‘பிளே–ஆப்’ சுற்றுக்கும் தகுதி பெற்றது. 

எமிரேட்சில், 14வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. அபுதாபியில் நடந்த லீக் போட்டியில் சென்னை, கோல்கட்டா அணிகள் மோதின. சென்னை அணியில் டுவைன் பிராவோ நீக்கப்பட்டு சாம் கர்ரான் தேர்வானார். ‘டாஸ்’ வென்ற கோல்கட்டா அணி கேப்டன் மார்கன் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

 

சுப்மன் ஏமாற்றம்: சென்னை அணியின் அசத்தல் பந்துவீச்சில் கோல்கட்டா அணி தடுமாறியது. சுப்மன் கில் (9), வெங்கடேஷ் ஐயர் (18) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. கேப்டன் இயான் மார்கன் (8) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய திரிபாதி (45) ஆறுதல் தந்தார். ஆன்ட்ரி ரசல் (20), ஷர்துல் தாகூரிடம் சரணடைந்தார். சாம் கர்ரான் வீசிய 18வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி விரட்டிய தினேஷ் கார்த்திக் (26), ஹேசல்வுட் பந்தில் ஆட்டமிழந்தார்.

கோல்கட்டா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 171 ரன் எடுத்தது. நிதிஷ் ராணா (37) அவுட்டாகாமல் இருந்தார்.

 

வருண் சவால்: சவாலான இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட், டுபிளசி ஜோடி நல்ல துவக்கம் தந்தது. சுனில் நரைன் ஓவரில் 2 சிக்சர் விளாசினார் ருதுராஜ். முதல் விக்கெட்டுக்கு 74 ரன் சேர்த்த போது ரசல் ‘வேகத்தில்’ ருதுராஜ் (40) வெளியேறினார். பிரசித் கிருஷ்ணா பந்தில் டுபிளசி (43) அவுட்டானார். அம்பதி ராயுடு (10) நிலைக்கவில்லை. மொயீன் (32) ஓரளவு கைகொடுத்தார். ‘சுழலில்’ மிரட்டிய தமிழகத்தின் வருண் வீசிய 18வது ஓவரில் ரெய்னா (11), கேப்டன் தோனி (1) அடுத்தடுத்து அவுட்டாக சிக்கல் ஏற்பட்டது. 

 

‘ஹாட்ரிக்’ வெற்றி: கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 26 ரன் தேவைப்பட்டன. பிரசித் கிருஷ்ணா வீசிய 19வது ஓவரில் ஜடேஜா துாள் கிளப்பினார். 2 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 22 ரன் கிடைக்க, சென்னை பக்கம் போட்டி வந்தது. வெற்றிக்கு 4 ரன் தேவைப்பட்ட நிலையில் நரைன் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் சாம் கர்ரான் (4) அவுட்டானார். அடுத்து வந்த ஷர்துல் தாகூர், 3வது பந்தில் 3 ரன் எடுத்தார். ஐந்தாவது பந்தில் ஜடேஜா (22) அவுட்டாக, ‘டென்ஷன்’ எகிறியது. கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்த தீபக் சகார் வெற்றியை உறுதி செய்தார்.

சென்னை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 172 ரன் எடுத்து ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றது. ஷர்துல் (3), தீபக் (1) அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை அணி 16 புள்ளிகளுடன் ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது. 

 

116 ‘கேட்ச்’

கீப்பிங்கில் அசத்திய தோனி, 2 ‘கேட்ச்’ செய்தார். இதுவரை கீப்பராக 116 ‘கேட்ச்’ (214 போட்டி) செய்துள்ளார். இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் அதிக ‘கேட்ச்’ செய்த விக்கெட் கீப்பர் பட்டியலில் தினேஷ் கார்த்திக்கை (115 ‘கேட்ச்’, 206 போட்டி) முந்தி முதலிடம் பிடித்தார்.

* தவிர, ஐ.பி.எல்., அரங்கில் அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்ட கீப்பர் பட்டியலில் தோனி (155 விக்கெட் வீழ்ச்சி, 116 ‘கேட்ச், 39 ‘ஸ்டெம்பிங்’) முதலிடத்தில் நீடிக்கிறார். இரண்டாவது இடத்தில் தினேஷ் கார்த்திக் (146 விக்கெட் வீழ்ச்சி, 115 ‘கேட்ச்’, 31 ‘ஸ்டெம்பிங்’) உள்ளார்.

 

‘விளையாடிய’ தமிழ்

கோல்கட்டா அணியில் தமிழகத்தின் தினேஷ் கார்த்திக், வருண் சக்ரவர்த்தி உள்ளனர். கீப்பராக செயல்படும் கார்த்திக், வருண் பந்துவீசும் போது தமிழில் பேசி உற்சாகப்படுத்துவது வழக்கம். இது, நேற்றும் தொடர்ந்தது. ‘வா வா வா’, ‘நல்லா போடு’ என்று கூறினார்.

 

ஏழாவது முறை

ஐ.பி.எல்., அரங்கில் சென்னை அணி 7வது முறையாக கடைசி பந்தில் ‘சேஸ்’ செய்து வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன், மும்பை அணி 6 முறை இப்படி வெற்றி பெற்றிருந்தது.

* தவிர சென்னை அணி, கோல்கட்டாவுக்கு எதிராக 3வது முறையாக (2012, 2020, 2021) கடைசி பந்தில் ‘சேஸ்’ செய்து வெற்றி பெற்றுள்ளது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?