Advertisement


இந்திய ‘சிங்கப்பெண்கள்’ வெற்றி: ஆஸி., சாதனைக்கு முற்றுப்புள்ளி

செப்டம்பர் 26, 2021 20:38
 Comments  
 


India, Australia, Women One Day International Cricket, Shafali Verma, Mandhana, Jhulan Goswami
 

மெக்கே: மூன்றாவது ஒருநாள் போட்டியில் அசத்திய இந்திய பெண்கள் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் சாதனை வெற்றி நடைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 

ஆஸ்திரேலியா சென்ற இந்திய பெண்கள் அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் தோற்ற இந்தியா, இரண்டாவது போட்டியில் சர்ச்சைக்குரிய ’நோ–பால்’ காரணமாக வீழ்ந்தது. இரு அணிகள் மோதிய மூன்றாவது போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

 

ஆஷ்லே ஆறுதல்: ஆஸ்திரேலியா அணிக்கு ராக்கேல் (13), அலிசா (25) ஜோடி சுமார் துவக்கம் தர, கேப்டன் மேக் லான்னிங்கை, ஜூலன் கோஸ்வாமி ‘டக்’ அவுட்டாக்கினார். எல்லிஸ் பெர்ரி 26 ரன் எடுக்க, பெத் மூனே (52), ஆஷ்லே (67) அரைசதம் அடித்தனர். தகிலா 47 ரன் எடுத்தார். ஆஸ்திரேலியா 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 264 ரன் எடுத்தது. இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி 3, பூஜா 3 விக்கெட் சாய்த்தனர்.

 

யஸ்திகா அபாரம்: கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா (22), ஷபாலி ஜோடி நல்ல துவக்கம் தந்தது. அடுத்து இணைந்த ஷபாலி, யஸ்திகா என இருவரும் அரைசதம் அடித்தனர். இரண்டாவது விக்கெட்டுக்கு 101 ரன் சேர்த்த போது இந்தியா எளிதாக வெல்லும் என நம்பப்பட்டது. மாறாக 56 ரன்னில் ஷபாலி அவுட்டானதும் திருப்பம் ஏற்பட்டது. ரிச்சா வந்த வேகத்தில் ‘டக்’ அவுட்டானார். மறுபக்கம் யஸ்திகா (64) கிளம்பினார். பூஜா (3), மிதாலி ராஜ் (16) அணியை கைவிட்டனர்.

 

கடைசி 23 பந்தில் 24 ரன் தேவை என்ற நிலையில் தீப்தியும் (31) அவுட்டாக, இந்தியா இலக்கை எட்டுமா என சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் ஸ்னே ராணா, மெக்ராத் ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடிக்க, இந்தியா வெற்றியை வேகமாக நெருங்கியது. அடுத்து ஸ்னே ராணா (30) அவுட்டாக. மனம் தளராத ‘சீனியர்’ ஜூலன் கோஸ்வாமி, ஒரு சூப்பர் பவுண்டரி அடிக்க, இந்திய அணி 49.3 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 266 ரன் எடுத்து, 2 விக்கெட்டில் ‘திரில்’ வெற்றி பெற்றது. ஜூலன் கோஸ்வாமி (8), மேக்னா (2) அவுட்டாகாமல் இருந்தனர். தொடர்ந்து 26 போட்டிகளில்  வென்ற ஆஸ்திரேலியாவின் வெற்றி நடை முடிவுக்கு வந்தது. இருப்பினும் தொடரை 2–1 என ஆஸ்திரேலியா வென்றது. 

 

26 வெற்றி

கடந்த 2018 ல் வதோதரா ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி இந்தியாவை 8 விக்கெட்டில் வென்றது. அன்று முதல் தொடர்ந்து 26 போட்டிகளில் தோல்வியடையாமல் வலம் வந்து, கிரிக்கெட் அரங்கில் உலக சாதனை படைத்தது. நேற்று இதற்கு பதிலடி கொடுத்த இந்திய பெண்கள் அணி, 2 விக்கெட்டில் வென்று ஆஸ்திரேலியாவின் வெற்றி நடையை அதன் சொந்தமண்ணில் முடிவுக்கு கொண்டு வந்தனர். 

 

சபாஷ் இந்தியா

கடந்த 1999 முதல் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி தொடர்ந்து 16 டெஸ்டில் வெற்றி பெற்று உலக சாதனை படைத்தது. அடுத்து 2001ல் கோல்கட்டாவில் நடந்த டெஸ்டில் எழுச்சி பெற்ற இந்திய அணி, இன்னிங்ஸ் தோல்வி வாய்ப்பில் இருந்து மீண்டு, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அதன் 16 டெஸ்ட் வெற்றி நடை முடிவுக்கு வந்தது. 

* அதேபோல கடந்த 2003 முதல் 2008 வரை ஆஸ்திரேலிய அணி சொந்தமண்ணில் தொடர்ந்து 25 டெஸ்டில் தோற்காமல் (22 வெற்றி, 3 ’டிரா’) வலம் வந்தது. 2008 அடிலெய்டு டெஸ்டில் அசத்திய இந்தியா, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, வெற்றி நடையை முடிவுக்கு கொண்டு வந்தது.

* தற்போது இந்திய பெண்கள் அணியும் தன் பங்கிற்கு ஆஸ்திரேலியா பெண்கள் அணியின் தொடர் வெற்றியை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

 

கைகொடுத்த ‘31’ 

நேற்று ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு மோசமாக அமைந்தது. 31 ‘வைடு’ வீசினர். தவிர பீல்டிங்கும் மந்தமாக அமைய இந்தியா வெற்றி பெற்றது.

 

சாதனை ‘சேஸ்’

நேற்று 266/8 ரன் எடுத்து வென்ற இந்திய பெண்கள் அணிக்கு, ஒருநாள் அரங்கில் இது சிறந்த ‘சேஸ்’ ஆக அமைந்தது. இதற்கு முன் 2019ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக வதோதரா போட்டியில் 248/5 ரன் எடுத்து வென்றதே அதிகம். 

* தவிர  ஆஸ்திரேலிய பெண்கள் அணிக்கு எதிராகவும் இது சிறந்த ‘சேஸ்’  ஆக அமைந்தது. இதற்கு முன் 2016,  ஹோபர்ட் போட்டியில் 234/5 ரன் எடுத்து வென்றதே அதிகம். 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?