Advertisement


‘பார்முலா–2’: ஜெகன் 3வது இடம்

செப்டம்பர் 26, 2021 19:23
 Comments  
 


Russia Formula 2 Championship, Jehan Daruvala, Third Place
 

சோச்சி: ரஷ்யாவில் நடந்த ‘பார்முலா–2’ கார்பந்தயத்தில் இந்திய வீரர் ஜெகன் தருவாலா 3வது இடம் பிடித்தார்.

நடப்பு ஆண்டுக்கான ‘பார்முலா–2’ கார்பந்தயம், 8 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. ரஷ்யாவின் சோச்சி நகரில் நடந்த 6வது சுற்றில் பிரிட்டனை சேர்ந்த ‘கார்லின்’ அணி சார்பில் இந்தியாவின் ஜெகன் தருவாலா 22, பங்கேற்றார். இதன் ‘பியூச்சர் ரேஸ்’ பிரிவில் இலக்கை 53 நிமிடம், 33.003 வினாடியில் கடந்த இவர், 3வது இடம் பிடித்தார். இதன்மூலம் இந்த சீசனில் 4வது முறையாக முதல் மூன்று இடங்களுக்குள் வந்தார். இதுவரை நடந்த 6 சுற்றுகளின் முடிவில் 96 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளார். சமீபத்தில் இத்தாலியில் நடந்த மான்சா ‘பார்முலா–2’ போட்டியில் ‘ஸ்பிரின்ட்–2’ பிரிவில் ஜெகன் முதலிடம் பிடித்தார். இதன்மூலம் கோப்பை வழங்கும் விழாவில் இந்திய மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

சோச்சி ‘பார்முலா–2’ பந்தயத்தில் ஆஸ்திரேலியாவின் ஆஸ்கார் பியாஸ்திரி (53 நிமிடம், 20.402 வினாடி) முதலிடம் பிடித்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?