Advertisement


ஜோதி சுரேகா ‘வெள்ளி’: உலக வில்வித்தையில்

செப்டம்பர் 26, 2021 19:07
 Comments  
 


World Archery Championships, Jyothi Surekha Vennam, Silver Medal, Compound Individual
 

யாங்க்டன்: உலக வில்வித்தையில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா, 3வது வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

அமெரிக்காவில் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதில் பெண்களுக்கான ‘காம்பவுண்டு’ தனிநபர் பைனலில் இந்தியாவின் ஜோதி சுரேகா, உலகின் ‘நம்பர்–3’ கொலம்பியாவின் சாரா லோபஸ் மோதினர். இதில் ஜோதி சுரேகா 144–146 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

கடந்த 2019ல் நெதர்லாந்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ‘காம்பவுண்டு’ தனிநபர் பிரிவில் ஜோதி சுரேகா வெண்கலம் வென்றிருந்தார். தவிர இவர், இம்முறை 3வது வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார். ஏற்கனவே ‘காம்பவுண்டு’ கலப்பு, அணிகள் பிரிவில் தலா ஒரு வெள்ளி வென்றிருந்தார். இது, உலக சாம்பியன்ஷிப் அரங்கில் ஜோதி சுரேகா கைப்பற்றிய 6வது பதக்கம். இதுவரை 4 வெள்ளி, 2 வெண்கலம் வென்றுள்ளார்.

 

அடுத்த இலக்கு: ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த ஜோதி சுரேகா 25, உலக யூத் சாம்பியன்ஷிப் (2 வெண்கலம்), ஆசிய சாம்பியன்ஷிப் (3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம்), உலக கோப்பை (ஒரு வெள்ளி, 5 வெண்கலம்) போட்டிகளிலும் பதக்கங்களை அள்ளினார். இதுகுறித்து ஜோதி சுரேகா கூறுகையில், ‘‘கடந்த முறை தனிநபர் பிரிவில் வெண்கலம் வென்றிருந்தேன். இம்முறை வெள்ளி வென்றதில் மகிழ்ச்சி. வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வெல்வதே இலக்கு,’’ என்றார்.

 

அபிஷேக் ஏமாற்றம்: ஆண்களுக்கான ‘காம்பவுண்டு’ தனிநபர் காலிறுதியில் உலக கோப்பையில் மூன்று பதக்கம் வென்ற இந்தியாவின் அபிஷேக் வர்மா 147–148 என்ற கணக்கில் உலகின் ‘நம்பர்–1’ நெதர்லாந்தின் மைக் ஷ்லோசரிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

 

காலிறுதியில் அன்கிதா: பெண்களுக்கான ‘ரீகர்வ்’ தனிநபர் ‘ரவுண்டு–16’ போட்டியில் இந்தியாவின் அன்கிதா பகத் 6–4 (29–28, 28–28, 27–27, 24–29, 29–28) என்ற கணக்கில் தென் கொரியாவின் காங் சே–யங்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?