Advertisement


சானியா ஜோடி சாம்பியன்

செப்டம்பர் 26, 2021 19:02
 Comments  
 


Ostrava Open Tennis, Sania Mirza, Shuai Zhang, Champion
 

ஆஸ்ட்ராவா: ஆஸ்ட்ராவா ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா, சீனாவின் ஷுவாய் ஜங் ஜோடி கோப்பை வென்றது.

செக்குடியரசில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., அந்தஸ்து பெற்ற ஆஸ்ட்ராவா ஓபன் டென்னிஸ் நடந்தது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சானியா மிர்சா, சீனாவின் ஷுவாய் ஜங் ஜோடி, நியூசிலாந்தின் எரின் ரூட்லிப், அமெரிக்காவின் கைட்லின் கிறிஸ்டியன் ஜோடியை எதிர்கொண்டது.

முதல் செட்டை 6–3 எனக் கைப்பற்றிய சானியா ஜோடி, 2வது செட்டை 6–2 என சுலபமாக தன்வசப்படுத்தியது.

 

ஒரு மணி நேரம், 4 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய சானியா, ஷுவாய் ஜங் ஜோடி 6–3, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன்மூலம் நடப்பு சீசனில் (2021) சானியா 34, தனது முதல் பட்டம் வென்றார். தவிர இது, இரட்டையர் பிரிவில் சானியா கைப்பற்றிய 43வது பட்டம்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?