Advertisement


பஞ்சாப் ‘திரில்’ வெற்றி * சுழலில் அசத்திய பிஷ்னாய்

செப்டம்பர் 25, 2021 22:11
 Comments  
 


IPL 2021, punjab vs Hyderabad
 

சார்ஜா: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் பஞ்சாப் அணி 5 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது.

எமிரேட்சில் நடக்கும் 14வது சீசன் ஐ.பி.எல்., தொடரில் நேற்று பஞ்சாப், ஐதராபாத் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் பீல்டிங் தேர்வு செய்தார். பஞ்சாப் அணியில் அடில் ரஷித், இஷான் போரல், பேபியன் ஆலன் நீக்கப்பட்டு அனுபவ வீரர் கெய்ல், எல்லிஸ், பிஷ்னாய் சேர்க்கப்பட்டனர்.

பஞ்சாப் அணிக்கு கேப்டன் லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால் ஜோடி இம்முறை சுமாரான துவக்கம் கொடுத்தது. புவனேஷ்வர் பந்தில் பவுண்டரி அடித்த ராகுல், சந்தீப் சர்மா பந்தையும் விட்டுவைக்கவில்லை. முதல் விக்கெட்டுக்கு 26 ரன் மட்டும் சேர்த்த நிலையில் ஹோல்டர் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் ராகுல் (21) வெளியேறினார்.

ஐந்தாவது பந்தில் மயங்க் அகர்வால் (5), வில்லியம்சனிடம் ‘கேட்ச்’ கொடுத்து திரும்பினார். அடுத்து அபாய வீரர் கெய்ல், மார்க்ரம் இணைந்தனர். மறுபக்கம் ஐதராபாத் பவுலர்களின் பந்துவீச்சு சிறப்பாக அமைய, ரன் சேர்க்க முடியாமல் இருவரும் திணறினர். பின் ரன்வேகத்தை அதிகரிக்க முயன்றனர். ரஷித் கான் பந்தில் மார்க்ரம், கலீல் அகமது பந்தில் கெய்ல் என தலா ஒரு பவுண்டரி அடித்த போதும் 10 ஓவரில் பஞ்சாப் அணி 55/2 ரன் தான் எடுத்திருந்தது.

கெய்ல் ‘அவுட்’

17 பந்தில் 14 ரன் மட்டும் எடுத்த நிலையில் கெய்ல், ரஷித் கான் சுழலில் சிக்கினார். அடுத்து, வந்த வேகத்தில் சிக்சர் அடித்த நிகோலஸ் பூரன் (8), சந்தீப் பந்தில் அவரிடமே ‘பிடி’ கொடுத்து வெளியேறினார். தீபக் ஹூடா (13), நாதன் எல்லிஸ் (12) நிலைக்கவில்லை. பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 125 ரன் மட்டும் எடுத்தது. ஹர்பிரீத் பிரார் (18) அவுட்டாகாமல் இருந்தார். ஐதராபாத் சார்பில் ஹோல்டர் 3 விக்கெட் சாய்த்தார்.

ஹோல்டர் மிரட்டல்

எளிய இலக்கைத் துரத்திய ஐதராபாத் அணிக்கு வார்னர் (2), வில்லியம்சன் (1), மணிஷ் பாண்டே (13) என ‘சீனியர்கள்’ அதிர்ச்சி கொடுத்தனர். கேதர் ஜாதவ் (12), அப்துல் சமத் (1) நீடிக்கவில்லை. அடுத்து வந்த ஹோல்டர், பிஷ்னாய் பந்தில் சிக்சர் விளாசினார். எல்லிஸ் ஓவரில் 2 சிக்சர் அடித்தார்.

சகா (31), ரஷித் கான் (3) அவுட்டான போதும், ஹோல்டர் தனி வீரராக போராடினார். ஷமி பந்தில் ஒரு சிக்சர் அடிக்க, கடைசி ஓவரில் ஐதராபாத் வெற்றிக்கு 17 ரன் தேவைப்பட்டன. எல்லிஸ் வீசிய இந்த ஓவரில் 11 ரன் மட்டும் எடுக்கப்பட, ஐதராபாத் அணி 20 ஓவரில் 120/7 ரன் மட்டும் எடுத்தது. பஞ்சாப் அணி 5 ரன்னில் ‘திரில்’ வெற்றி பெற்றது. ஹோல்டர் (47), புவனேஷ்வர் (3) அவுட்டாகாமல் இருந்தனர். சுழலில் அசத்திய பிஷ்னாய் 3 விக்கெட் வீழ்த்தினார். 9 போட்டியில் 1ல் மட்டும் வென்ற ஐதராபாத் அணி, ‘பிளே ஆப்’ வாய்ப்பை இழந்தது. 

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?