Advertisement


வருணை சமாளிக்குமா சென்னை * கோல்கட்டாவுடன் பலப்பரீட்சை

செப்டம்பர் 25, 2021 22:09
 Comments  
 


IPL 2021, Chennai, dhoni, cricket, raina, bravo, Kolkata
 

அபுதாபி: ஐ.பி.எல்., தொடரில் சென்னை, கோல்கட்டா அணிகள் மோதுகின்றன. இதில் ‘சுழல்’ கலை தெரிந்த சென்னை பேட்ஸ்மேன்கள், கோல்கட்டாவின் வருண் சக்ரவர்த்தி வலையில் இருந்து தப்புவார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. அபுதாபியில் நடக்கும் லீக் போட்டியில் தோனியின் சென்னை, மார்கனின் கோல்கட்டா அணிகள் மோதுகின்றன. 

இரண்டாவது கட்ட போட்டிகள் துவங்கிய பின், இரு அணிகளும் மும்பை, பெங்களூருவை அடுத்தடுத்து வென்றன. இதில் சென்னை அணி 9 போட்டியில் 7 வெற்றியுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ளது. இன்று சாதிக்கும் பட்சத்தில் 2019க்குப் பின் மீண்டும் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறலாம். 

இதற்கேற்ப துவக்க வீரர் ருதுராஜ், டுபிளசி என இருவரும் சிறப்பான ‘பார்மில்’ உள்ளனர். மொயீன் அலி, அம்பதி ராயுடு, ரெய்னா என ‘சீனியர்களும்’ ரன்வேட்டையில் ஈடுபடுகின்றனர். கேப்டன் தோனியின் வியூகங்களும் அணிக்கு பெரும் சாதகமாக உள்ளன.

பவுலிங் நம்பிக்கை

பந்து வீச்சில் தீபக் சகார், ஷர்துல் தாகூருடன் ‘அனுபவ’ பிராவோ, மீண்டும் நம்பிக்கை நாயகனாக உருவெடுத்துள்ளார். சுழலில் ஜடேஜா, இம்ரான் தாகிர் ரன்களை கட்டுப்படுத்துகின்றனர். 

‘இரண்டு’ பலம்

மறுபக்கம் கோல்கட்டா அணி 9 போட்டியில் 4ல் வென்றது (8 புள்ளி). மீதமுள்ள 5 போட்டியில் 4ல் வென்றால் மட்டுமே ‘பிளே ஆப்’ உறுதியாகும். இதனால் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. துவக்க வீரர் ‘புதிய வரவு’ வெங்கடேஷ் ஐயர், சுப்மன் கில், திரிபாதி, ‘அபாய’ ஆன்ட்ரி ரசல் என பலரும் பேட்டிங்கில் ரன் மழை பொழிகின்றனர். கேப்டன் மார்கன் ‘பார்ம்’ கவலை தருகிறது. தினேஷ் கார்த்திக், ராணாவும் உதவலாம். 

பந்து வீச்சில் தமிழக ‘சுழல்’ நாயகன் வருண் சக்ரவர்த்தி இருப்பது பலம். பல்வேறு விதத்தில் பந்துவீசி எதிரணிக்கு பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தருகிறார். பிரசித் கிருஷ்ணா, டிம் சவுத்தி, சுனில் நரைனும் தன் பங்கிற்கு கைகொடுக்கின்றனர். கடந்த 2014 ல் தொடர்ந்து 9 போட்டியில் வென்று கோப்பை வென்றது போல, இம்முறை சாதிக்க முயற்சிக்கிறது கோல்கட்டா. இது தோனியிடம் எடுபடுமா என இன்று தெரியும்.

 

16

சென்னை, கோல்கட்டா அணிகள் 25 முறை மோதின. இதில் சென்னை 16ல் வெற்றி பெற்றது. கோல்கட்டா 9ல் வென்றது. 

* இரு அணிகள் கடைசியாக மோதிய 5 போட்டிகளில் சென்னை 4ல் வென்றுள்ளது. 

 

பிராவோ ‘புரோ’

சென்னை அணி கேப்டன் தோனி கூறுகையில்,‘‘பிராவோ உடற்தகுதியுடன் உள்ளார். திட்டங்களை சரியாக செயல்படுத்துகிறார். அவரை எனது சகோதரர் (செல்லமாக ‘புரோ’) என்று தான் அழைப்பேன். அவ்வப்போது பந்தை மெதுவாக வீசுமாறு சொல்வேன். இதனால் எங்களுக்கும் சண்டை வரும்,’’ என்றார்.

 

நண்பேன்டா...

தோனி, கோஹ்லி இருவரும் நண்பர்கள். சார்ஜாவில் நடந்த ஐ.பி.எல்., போட்டியில் இருவரது அணிகளும் மோதின. மணல் புயல் காரணமாக போட்டி துவங்க தாமதமாக, தோனி, கோஹ்லி இருவரும் சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். பின், போட்டியில் வென்ற மகிழ்ச்சியில் சக சென்னை வீரர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார் தோனி. அப்போது பின்னால் வந்த பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி, தோனியை அப்படியே கட்டிப்பிடித்து இடித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. 

 

கோஹ்லி–ரோகித் மோதல்

துபாயில் இன்று நடக்கும் மற்றொரு போட்டியில் கோஹ்லியின் பெங்களூரு (9ல் 5 வெற்றி, 10 புள்ளி), ரோகித் சர்மாவின் மும்பை (9ல் 4 வெற்றி, 8 புள்ளி) அணிகள் மோதுகின்றன. இரு அணிகள் மோதிய 30 போட்டியில் மும்பை 19, பெங்களூரு 11ல் வென்றன.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?