Advertisement


வரலாறு படைத்தார் ஜோதி * உலக வில்வித்தையில்...

செப்டம்பர் 25, 2021 22:03
 Comments  
 


Jyothi Surekha Vennam wins historic twin silvers at Archery World Championships
 

யாங்க்டன்: உலக கோப்பை வில்வித்தைதொடரில் இரண்டு வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார் இந்தியாவின் ஜோதி.

அமெரிக்காவில் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதன் காம்பவுண்டு பெண்கள் அணிகள்பைனலில் ஜோதி சுரேகா, முஸ்கான், பிரியா இடம் பெற்ற இந்திய அணி, கொலம்பியாவின் சாரா, நோரா, அலெக்சாண்ட்ரா அடங்கிய அணியிடம் 224–229 என்ற கணக்கில் தோற்று, வெள்ளிப்பதக்கம் வென்றது. 2017 (வெள்ளி), 2019க்குப் (வெண்கலம்) பின் இந்தியா பெண்கள் அணி வென்ற மூன்றாவது பதக்கம் இது.

அடுத்து நடந்தகலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் ஜோதி, அபிஷேக் வர்மா கூட்டணி, கொலம்பியாவின் நோரா, டேனியல் அணியை எதிர்கொண்டது. இதில் இந்தியா 150–154 என்ற கணக்கில் தோற்று வெள்ளி வென்றது. காம்பவுண்டு கலப்பு பிரிவில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இது.

புதிய வரலாறு

இதையடுத்து ஒரே தொடரில் இரண்டு வெள்ளி (அணிகள், கலப்பு அணி) வென்ற முதல் இந்தியர் என வரலாறு படைத்தார் ஜோதி. இதற்கு முன் 2017ல் வெள்ளி (பெண்கள் அணி), 2019ல் இரண்டு வெண்கலம் (பெண்கள் அணி, தனிநபர்) வென்ற இவர், ஒட்டுமொத்தமாக 5 பதக்கம் வென்றுள்ளார். தவிர உலக வில்வித்தையில் மூன்று பிரிவிலும் பதக்கம் வென்ற முதல் இந்தியர் ஆனார் ஜோதி.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?