Advertisement


ராஜஸ்தானை வீழ்த்தியது டில்லி: ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேற்றம்

செப்டம்பர் 25, 2021 20:09
 Comments  
 


IPL 2021, T20 Cricket, Delhi, Rajasthan, Shreyas Iyer
 

அபுதாபி: ஐ.பி.எல்., தொடரில் ஜல்லிக்கட்டு காளையாக துள்ளும் டில்லி, 16 புள்ளிகளுடன் ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியது. லீக் போட்டியில் ராஜஸ்தானை 33 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

எமிரேட்சில், 14வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. அபுதாபியில் நடந்த லீக் போட்டியில் டில்லி, ராஜஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

 

ஸ்ரேயாஸ் நம்பிக்கை: டில்லி அணிக்கு ஷிகர் தவான் (8), பிரித்வி ஷா (10) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. பின் இணைந்த ஸ்ரேயாஸ் ஐயர், கேப்டன் ரிஷாப் பன்ட் ஜோடி பொறுப்பாக விளையாடியது. கார்த்திக் தியாகி, ஷாம்சி பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்தார் பன்ட். ராகுல் டிவாட்டியா, ஷாம்சி பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசினார் ஸ்ரேயாஸ். மூன்றாவது விக்கெட்டுக்கு 62 ரன் சேர்த்த போது முஷ்தபிஜுர் ‘வேகத்தில்’ பன்ட் (24) போல்டானார். டிவாட்டியா ‘சுழலில்’ ஸ்ரேயாஸ் (43) சிக்கினார்.

சேட்டன் சக்காரியா, கார்த்திக் தியாகி பந்துகளில் 5 பவுண்டரி அடித்த ஷிம்ரன் ஹெட்மயர் (28) ஓரளவு கைகொடுத்தார். அக்சர் படேல் (12) நிலைக்கவில்லை. ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 154 ரன் எடுத்தது. லலித் யாதவ் (14), அஷ்வின் (6) அவுட்டாகாமல் இருந்தனர். ராஜஸ்தான் சார்பில் முஷ்தபிஜுர், சக்காரியா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

 

சாம்சன் ஆறுதல்: சவாலான இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு லியாம் லிவிங்ஸ்டன் (1), யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (5) ஏமாற்றினர். அஷ்வின் ‘சுழலில்’ டேவிட் மில்லர் (7) சிக்கினார். மஹிபால் லாம்ரர் (19) நிலைக்கவில்லை. ரபாடா வீசிய 15வது ஓவரில் 3 பவுண்டரி அடித்த கேப்டன் சஞ்சு சாம்சன், அரைசதம் கடந்தார். இவருக்கு, ரியான் பராக் (2), ராகுல் டிவாட்டியா (9) ஒத்துழைப்பு தரவில்லை.

ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 121 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. சாம்சன் (70 ரன், 8 பவுண்டரி, 1 சிக்சர்), ஷாம்சி (2) அவுட்டாகாமல் இருந்தனர். டில்லி சார்பில் நார்ட்ஜே 2 விக்கெட் வீழ்த்தினார்.

 

ஆட்ட நாயகன் விருதை டில்லி அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் வென்றார். டில்லி அணி, 10 போட்டியில், 8 வெற்றி, 2 தோல்வி என, 16 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது. இதன்மூலம் ‘பிளே–ஆப்’ சுற்றுக்கான இடத்தை உறுதி செய்தது.

 

அஷ்வின் ‘250’

ராஜஸ்தானின் டேவிட் மில்லரை அவுட்டாக்கிய டில்லி அணியின் தமிழக ‘சுழல்’ வீரர் அஷ்வின், ‘டுவென்டி–20’ அரங்கில் தனது 250வது விக்கெட்டை பதிவு செய்தார். இதுவரை 254 போட்டியில், 250 விக்கெட் சாய்த்துள்ளார். இதன்மூலம் ‘டுவென்டி–20’ போட்டியில் 250 விக்கெட் கைப்பற்றிய 3வது இந்திய சுழற்பந்துவீச்சாளரானார். ஏற்கனவே அமித் மிஸ்ரா (262 விக்கெட், 236 போட்டி), பியுஸ் சாவ்லா (262 விக்கெட், 249 போட்டி) இம்மைல்கல்லை எட்டினர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?