Advertisement


அஷ்வின் பயம் ஏன் * சேவக் கணிப்பு

செப்டம்பர் 23, 2021 22:46
 Comments  
 


MS Dhoni never allowed R Ashwin to experiment, Virender Sehwag
 

புதுடில்லி: ‘‘அஷ்வின் பயந்து பயந்து பந்து வீசுகிறார்,’’ என சேவக் தெரிவித்தார்.

ஐ.பி.எல்., தொடரில் டில்லி அணிக்காக விளையாடுகிறார் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின். 14 வது சீசனில் முதல் 5 போட்டிகளில் 1 விக்கெட்டு மட்டும் வீழ்த்திய இவர், கொரோனா பாதித்த குடும்பத்தினருக்கு உதவ தொடரில் இருந்து விலகினார். தற்போது எமிரேட்சில் நடக்கும் மீதமுள்ள போட்டிகளில் அஷ்வின் பங்கேற்றுள்ளார். ஐதராபாத் அணிக்கு எதிராக 2.5 ஓவர் வீசிய இவர் 22 ரன் கொடுத்து விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.

இதுகுறித்து இந்திய அணி முன்னாள் வீரர் சேவக் கூறியது:

வழக்கமான முறையில் பந்து வீசினால் பவுண்டரி அல்லது சிக்சர் அடித்து விடுவர் என்ற எண்ணம் அஷ்வின் மனதில் ‘செட்’ஆகி விட்டது. இதனால் ஏற்பட்ட பயம் காரணமாக புதிய முறையில் பந்துவீச முயற்சிக்கிறார். ஒருவேளை தோனி களத்தில் இருந்தால், இப்படி பந்துவீச அஷ்வினை அனுமதிக்க மாட்டார். சில நேரங்களில் பேட்டர்கள் சிக்சர் அடிப்பர் என்பதில் சந்தேகம் இல்லை. அதேநேரம் பேட்டர்கள் அவுட்டாவதற்கு நீங்கள் தான் வாய்ப்பு தர வேண்டும்.

இவர் பந்து வீசுவதை பார்த்தால், பேட்டர்கள் அவுட்டாக வாய்ப்பு மிக குறைவு தான். அஷ்வின் அதிகமாக ரன்களை வழங்கவில்லை என்பது உண்மை தான். எனினும் ‘சீனியர்’ பவுலரான இவர், ‘மிடில் ஓவர்களில்’ அணிக்கு விக்கெட்டுகளை வீழ்த்த கைகொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

காம்பிர் ‘அட்வைஸ்’

இந்திய அணி முன்னாள் வீரர் காம்பிர் கூறுகையில்,‘‘உலகின் தற்போதைய சிறந்த ‘ஆப் ஸ்பின்னர்’ அஷ்வின். ஆனால் இவர் இதுபோல பந்து வீசுவதில்லை. சிக்சர் அடித்தாலும் பரவாயில்லை, உங்களது வழக்கமான முறையில் பந்து வீசுங்கள். டெஸ்ட் போட்டிகளில் போல செயல்பட்டு ‘பார்முக்கு’ திரும்புங்கள்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?