Advertisement


தோனியை சமாளிப்பாரா கோஹ்லி *சென்னை–பெங்களூரு மோதல்

செப்டம்பர் 23, 2021 22:44
 Comments  
 


Bangalore seek return to winning ways against resilient Chennai
 

சார்ஜா: ஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று தோனியின் சென்னை அணி, கோஹ்லியின் பெங்களூருவை சந்திக்கிறது. ‘சீனியர்’ தோனியின் ‘டாடிஸ் ஆர்மியை’, கோஹ்லியின் படை சமாளிக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஐ.பி.எல்., தொடர் 14 வது சீசனின் இரண்டாவது கட்ட போட்டிகள் எமிரேட்சில் நடக்கின்றன. இன்று சார்ஜாவில் நடக்கும் லீக் போட்டியில் தோனியின் சென்னை, கோஹ்லியின் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ‘சீனியர்’ வீரர்கள் அதிகம் அடங்கிய ‘டாடிஸ் ஆர்மி’ என செல்லமாக அழைக்கப்படும் சென்னை அணி இதுவரை 8ல் 6 போட்டியில் வென்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

கடந்த போட்டியில் மும்பைக்கு எதிராக ஒருகட்டத்தில் 24 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. துவக்க வீரர் ருதுராஜ் 88 ரன்கள் விளாசி அணி மீண்டு வர கைகொடுத்தார். அதிக ரன் எடுத்த டுபிளசி (320), மொயீன் அலி, துணைக் கேப்டன் ரெய்னா இன்று சுதாரித்துக் கொண்டால் நல்லது. கேப்டன் தோனியும் ரன் மழை பொழியாதது ஏமாற்றம் தான் எனினும் பின் வரிசையில் அனுபவ பிராவோ, ‘ஆல் ரவுண்டர்’ ஜடேஜா கைகொடுக்கின்றனர்.

பவுலிங் எப்படி

பவுலிங்கில் தீபக் சகார், பிராவோ கூட்டணி விக்கெட் வேட்டை நடத்தியது. தீபக் சகார் காயத்தில் அவதிப்படுவது பின்னடைவு. தவிர ஹேசல்வுட்டும் நம்பிக்கை தருகிறார். சார்ஜா மைதானம் அளவில் சிறியது என்பதால் ‘சுழல்’ இம்ரான் தாகிருக்குப் பதில் வேகப்பந்து வீச்சு ‘ஆல் ரவுண்டர்’ சாம் கர்ரான் அணிக்கு திரும்பலாம்.

கிடைக்குமா வெற்றி

பெங்களூரு அணி 8ல் 5 போட்டியில் வென்றுள்ளது. தேவ்தத் படிக்கல் (217 ரன்), கேப்டன் கோஹ்லி (203) என இருவரும் மீண்டும் சிறப்பான துவக்கம் தர வேண்டும். அடுத்து வரும் மேக்ஸ்வெல் (233), டிவிலியர்ஸ் (207) என அனைவரும் முதல் கட்ட போட்டிகளில் அசத்தினர். இது மீண்டும் தொடர்ந்தால் சென்னை அணிக்கு சவால் கொடுக்கலாம்.

பந்து வீச்சில் முகமது சிராஜ், ஹர்ஷல் படேல், ஜேமிசன் கூட்டணியில் மாற்றம் இருக்காது. சுழலில் சகாலுடன், ஹசரங்கா இடம் பெறுவது சந்தேகம் தான்.

இரு மடங்கு

சென்னை, பெங்களூரு அணிகள் 28 போட்டிகளில் மோதின. இதில் சென்னை அணி 18 ல் வென்றுள்ளது. பெங்களூரு அணி 9 போட்டியில் வென்றது. ஒரு போட்டிக்கு முடிவில்லை. இரு அணிகள் கடைசியாக மோதிய இரு போட்டியிலும் சென்னை வென்றது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?