Advertisement


நடராஜனுக்கு கொரோனா * தனிமையில் தமிழக வீரர்கள்

செப்டம்பர் 22, 2021 22:29
 Comments  
 


SUNRISERS HYDERABAD PLAYER TESTS POSITIVE, SIX CLOSE CONTACTS ISOLATED
 

துபாய்: ஐதராபாத் அணி வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு கொரோனா உறுதியானது. இதனால் விஜய் சங்கர், பெரியசாமி உட்பட 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் நடந்தது. 29 போட்டிகள் முடிந்த நிலையில், கோல்கட்டா அணியின் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியாருக்கு கொரோனா ஏற்பட்டது. அடுத்து பயிற்சியாளர் பாலாஜி (சென்னை), சகா (ஐதராபாத்), அமித் மிஸ்ரா (டில்லி) என பலருக்கும் பரவ, தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது.

தற்போது 139 நாட்களுக்குப் பின், 14 வது சீசனின்மீதமுள்ள 31 போட்டிகள்எமிரேட்சில்நடக்கின்றன. மூன்று போட்டிகள் முடிந்த நிலையில் நேற்று ஐதராபாத், டில்லி அணிகள் துபாயில் மோதின. இப்போட்டி துவங்குவதற்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா சோதனையில், ஐதராபாத் அணியின் தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு 30, கொரோனா இருப்பது உறுதியானது.

கொரோனாவை தடுக்க விதிகள் கடுமையாக உள்ள நிலையில், இரு முறை தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடராஜன் பாதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் போர்டு வெளியிட்ட செய்தியில்,‘ நடராஜனிடம் நடந்த ‘ஆர்.டி–பி.சி.ஆர்.,’ சோதனையில் அறிகுறியற்ற கொரோனா இருப்பது உறுதியாக, தனிமைப்படுத்தப்பட்டார். இவருடன் நெருக்கமாக இருந்த தமிழக வீரர் விஜய் சங்கர், பெரியசாமி (‘நெட்’ பவுலர்), தவிர பணியாளர்கள் உட்பட 6 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர். மற்ற வீரர்களிடம் நடந்த சோதனையில் ‘நெகட்டிவ்’ என வந்தது. இதனால் திட்டமிட்டபடி போட்டி தொடரும்,’ என தெரிவித்துள்ளது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?