Advertisement


ரூ.30,000 கோடி * ஐ.பி.எல்., ஒளிபரப்பு உரிமம் பெற

செப்டம்பர் 22, 2021 22:15
 Comments  
 


ipl media rights auction, CRICKET, india
 

புதுடில்லி: ஐ.பி.எல்., ‘டி.வி’ ஒளிபரப்பு உரிமம், அடுத்த 5 ஆண்டுக்கு ரூ. 30,000 கோடியை எட்ட உள்ளது.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், கடந்த 2008ல் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) ‘டுவென்டி–20’ கிரிக்கெட் தொடர் துவங்கப்பட்டது. இதற்கான ‘டிவி’ நேரடி ஒளிபரப்பு உரிமத்தை பெற்ற சோனி நிறுவனம் முதல் ஆண்டில் ரூ. 460 கோடி கொடுத்தது. 2009 முதல் ஆண்டுக்கு ரூ. 900 கோடி கொடுத்தது.

அடுத்து வந்த ஸ்டார் நிறுவனம் கடந்த ஐந்தாண்டுக்கு ரூ. 16,347.50 கோடி கொடுத்தது. தற்போது அடுத்த சீசனில் புதியதாக இரு அணிகள் சேர்க்கப்பட உள்ளதால் போட்டிகள் எண்ணிக்கை 74 அல்லது 94 ஆக அதிகரிக்கும். இதனால் இந்த ஆண்டு இறுதியில் அல்லது 2022 துவக்கத்தில் நடக்கவுள்ள ‘டி.வி’ ஒளிபரப்பு உரிம ஏலம் களை கட்டவுள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுக்கான மதிப்பு, ஏலத்தின் வெற்றியை பொறுத்து எப்படியும் ரூ. 30,000 கோடி முதல் ரூ. 40,000 கோடி வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஸ்டார் நிறுவனத்துடன் சோனி, விஸ்காம் 18, ரிலையன்ஸ் என மூன்று முன்னணி நிறுவனங்கள் உரிமையை பெற போட்டியிட உள்ளன.

அதேபோல உலகளவில் விளையாட்டு போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்வதில் முன்னேற்றம் அடைந்துள்ள அமேசான் நிறுவனமும் ஏலத்தில் பங்கேற்க திட்டமிட்டுள்ளது. 

டிரிபிள்காம் மீடியா நிறுவனர், தலைமை செயல் அதிகாரி குணால் தாஸ்குப்தா கூறுகையில்,‘‘இம்முறை ஏலத் தொகை 50 சதவீதம் அதிகரித்து ரூ. 24,000 கோடியாக வாய்ப்புள்ளது. இதை ஒரே நிறுவனம் தட்டிச் செல்லும் என நினைக்கவில்லை. 

தவிர 2 புதிய அணிகள் சேர்ப்பதால், அடுத்த ஆண்டு போட்டி எண்ணிக்கை 94 ஆக அதிகரிக்கலாம். இதனால் ஐ.பி.எல்., ‘மீடியா’, ஒளிபரப்பு உரிமம் ரூ. 30,000 கோடி முதல் ரூ. 40,000 கோடி வரை உயர வாய்ப்புள்ளது,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?