Advertisement


காலிறுதியில் சானியா ஜோடி

செப்டம்பர் 22, 2021 21:47
 Comments  
 


Ostrava Open Tennis, Sania Mirza, Shuai Zhang
 

ஆஸ்ட்ராவா: ஆஸ்ட்ராவா ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் சானியா, சீனாவின் ஷுவாய் ஜங் ஜோடி முன்னேறியது.

செக்குடியரசில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., அந்தஸ்து பெற்ற ஆஸ்ட்ராவா ஓபன் டென்னிஸ் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, சீனாவின் ஷுவாய் ஜங் ஜோடி, அமெரிக்காவின் இமினா பெக்டாஸ், பிரிட்டனின் டாரா மூர் ஜோடியை சந்தித்தது.

‘டை பிரேக்கர்’ வரை நீடித்த முதல் செட்டை 6–7 என இழந்த சானியா ஜோடி, பின் எழுச்சி கண்டு 2வது செட்டை 7–5 எனக் கைப்பற்றி பதிலடி தந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் ‘சூப்பர் டை பிரேக்கரில்’ மீண்டும் அசத்திய இந்தியா–சீன ஜோடி 10–7 என தன்வசப்படுத்தியது. ஒரு மணி நேரம், 43 நிமிடம் நீடித்த போட்டியில் சானியா, ஷுவாய் ஜங் ஜோடி 6–7, 7–5, 10–7 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.

 

மற்றொரு போட்டியில் இந்தியாவின் ருடுஜா போசாலே, பிரிட்டனின் எமிலி வெப்லே–ஸ்மித் ஜோடி 3–6, 4–6 என, அமெரிக்காவின் கைட்லின் கிறிஸ்டியான், நியூசிலாந்தின் எரின் ரூட்லிப் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?