Advertisement


சிராக்–சாத்விக் ஜோடி விலகல்: சுதிர்மன் பாட்மின்டனில் இருந்து

செப்டம்பர் 22, 2021 21:45
 Comments  
 


Sudirman Cup Badminton, Chirag Shetty, Satwiksairaj Rankireddy, Withdraw
 

புதுடில்லி: சுதிர்மன் கோப்பை பாட்மின்டனில் இருந்து இந்தியாவின் சிராக் ஷெட்டி, சாத்விக்சாய்ராஜ் ஜோடி விலகியது.

பின்லாந்தில், வரும் செப். 26 முதல் அக். 3 வரை சுதிர்மன் கோப்பை பாட்மின்டன் தொடர் நடக்கவுள்ளது. அதன்பின் டென்மார்க்கில் தாமஸ் மற்றும் உபர் கோப்பை பாட்மின்டன் வரும் அக். 9–17ல் நடக்கவுள்ளது.

இத்தொடர்களுக்கான இந்திய அணியில் ஆண்கள் இரட்டையர் பிரிவு ஜோடியான சிராக் ஷெட்டி, சாத்விக்சாய்ராஜ் இடம் பிடித்திருந்தனர். இவர்களுக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் சுதிர்மன் கோப்பையில் இருந்து விலகினர். தாமஸ் கோப்பையில் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. உடல் நிலை தேறுவதை பொறுத்து முடிவு செய்யப்படும்.

 

இந்திய பாட்மின்டன் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘மருத்துவ காரணங்களுக்கான சுதிர்மன் கோப்பையில் இருந்து சிராக், சாத்விக்சாய்ராஜ் ஜோடி விலகியது. தாமஸ் கோப்பையில் பங்கேற்பது சந்தேகம்,’’ என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

சிராக்–சாத்விக்சாய்ராஜ் ஜோடி விலகியதால் ஆண்கள் இரட்டையரில் இந்தியா சார்பில் துருவ் கபிலா, அர்ஜுன் ஜோடி களமிறங்க உள்ளது. சுதிர்மன் கோப்பையில் இந்திய அணி, ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் சீனா, தாய்லாந்து, பின்லாந்து அணிகளுடன் இடம் பிடித்துள்ளது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?