Advertisement


இந்தியா–ஆஸ்திரேலிய பெண்கள் மோதல்: ஒருநாள் தொடர் ஆரம்பம்

செப்டம்பர் 20, 2021 22:39
 Comments  
 


India, Australia, Women One Day International Cricket, Mithali Raj, Meg Lanning
 

மக்கே: இந்தியா, ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, மூன்று ஒருநாள், ஒரு டெஸ்ட், மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி குயீன்லாந்தின் மக்கே நகரில் இன்று நடக்கிறது.

சமீபத்தில் தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக தொடரை இழந்த சோகத்தில் உள்ள இந்திய அணிக்கு மீண்டும் ஒரு சவால் காத்திருக்கிறது. ஏனெனில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி, தொடர்ச்சியாக 24 ஒருநாள் போட்டிகளில் வெற்றி வாகை சூடி சாதனை படைத்துள்ளது. 

 

ஹர்மன்பிரீத் காயம்: கட்டை விரலில் ஏற்பட்டுள்ள காயத்தால் இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர் இப்போட்டியில் பங்கேற்காதது பின்னடைவு. பேட்டிங்கில் கேப்டன் மிதாலி ராஜ், ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், யஸ்திகா, பூணம் ராத், தீப்தி சர்மா ரன் மழை பொழிய வேண்டும். பவுலிங்கில் ஜுலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, பூணம் யாதவ், பூஜா, ராஜேஷ்வரி கைகொடுக்கலம். இந்திய அணி ‘மிடில்–ஆர்டரை’ பலப்படுத்த வேண்டும்.

ஆஸ்திரேலிய அணிக்கு ஹெய்ன்ஸ், கேப்டன் மெக் லான்னிங், பெத் மூனே, அலிசா ஹீலி, எல்லிஸ் பெர்ரி உள்ளிட்டோர் வெற்றிக்கு உதவலாம்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?