Advertisement


நம்பிக்கை தந்த ருதுராஜ், பிராவோ: கேப்டன் தோனி பாராட்டு

செப்டம்பர் 20, 2021 22:31
 Comments  
 


IPL 2021, T20 Cricket, Chennai, Mumbai, Mahendra Singh Dhoni, Ruturaj Gaikwad, Dwayne Bravo
 

துபாய்: ‘‘மும்பைக்கு எதிரான போட்டியில் ருதுராஜ், பிராவோ எதிர்பார்த்ததைவிட சிறப்பாக செயல்பட்டனர்,’’ என, தோனி தெரிவித்தார்.

துபாயில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி 20 ரன் வித்தியாசத்தில் ‘நடப்பு சாம்பியன்’ மும்பை அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் சென்னை அணி ஒருகட்டத்தில் 24 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின் இணைந்த ருதுராஜ் கெய்க்வாட், ரவிந்திர ஜடேஜா ஜோடி 5வது விக்கெட்டுக்கு 81 ரன் சேர்த்தது. அதன்பின் ருதுராஜ் (4 சிக்சர்), டுவைன் பிராவோ (3) ஜோடி சிக்சர் மழை பொழிந்தது. இதனையடுத்து சென்னை அணி 20 ஓவரில் 156 ரன் குவித்தது. இதில் 58 பந்தில் 88 ரன் (4 சிக்சர், 9 பவுண்டரி) விளாசிய ருதுராஜ், ஆட்ட நாயகன் விருது வென்றார். பவுலிங்கில் அசத்திய பிராவோ, 3 விக்கெட் கைப்பற்றினார்.

 

இதுகுறித்து சென்னை அணி கேப்டன் தோனி கூறியது: ஒருகட்டத்தில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து 24 ரன் தான் எடுத்திருந்தோம். இதனால் 140 ரன் தான் கிடைக்கும் என்று நினைத்தோம். ஆனால் அபாரமாக ஆடிய ருதுராஜ், டுவைன் பிராவோ, நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக வழங்கிவிட்டனர். இதனால் 160 ரன்னுக்கு அருகில் செல்ல முடிந்தது. துவக்க வீரராக களமிறங்கிய ஒரு பேட்ஸ்மேன், கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருப்பது தனிச்சிறப்பு.

அம்பதி ராயுடுவுக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டதால், அவரால் மீண்டும் பேட்டிங் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் சூழ்நிலைக்கு ஏற்ப பேட்டிங் செய்து சிறப்பாக முடித்தோம். ஆடுகளம் இரண்டு விதமாக இருந்தது. துவக்கத்தில் மந்தமாக இருந்தது. அதன்பின் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைப்பு தந்தது. ராயுடு பின்வரிசையில் களமிறங்கி இருந்தாலும் பேட் செய்ய கடினமாக இருந்திருக்கும். அடுத்த போட்டிக்குள் இவர் முழுஉடற்தகுதி பெற்றுவிடுவார்.

இவ்வாறு தோனி கூறினார்.

 

கூடுதல் பொறுப்பு

ஆட்ட நாயகன் விருது வென்ற ருதுராஜ் கூறுகையில், ‘‘எங்கள் ‘டாப்–ஆர்டர்’ பேட்ஸ்மேன்கள் விரைவில் அவுட்டானதால் சூழ்நிலை கடினமாக இருந்தது. இதனால் நான் கூடுதல் பொறுப்பை ஏற்க வேண்டியிருந்தது. ரவிந்திர ஜடேஜாவுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்த திட்டமிட்டு விளையாடினேன். இதற்கு நல்ல பலன் கிடைத்தது,’’ என்றார்.

 

ராயுடுவுக்கு எலும்பு முறிவா

மும்பையின் ஆடம் மில்னே வீசிய பந்து தாக்கியதில் முழங்கையில் காயமடைந்த சென்னையின் அம்பதி ராயுடு, ‘ரிட்டயர்டு ஹர்ட்’ ஆனார். இதுகுறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறுகையில், ‘‘அம்பதி ராயுடுவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்குமோ என்று பயந்தோம். ஆனால் ‘எக்ஸ்–ரே’ எடுத்து பார்த்ததில் எவ்வித பாதிப்பும் இல்லை. தீபக் சகாருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. அவரையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். விரைவில் பூரண குணமடைந்து இருவரும் போட்டிக்கு திரும்புவர் என்று நம்புகிறோம்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?