Advertisement


கோல்கட்டா ‘சக்ரவர்த்தி’ வருண் * கோஹ்லி அணி ஏமாற்றம்

செப்டம்பர் 20, 2021 21:54
 Comments  
 


IPL 2021, RCB to wear blue jersey against KKR
 

அபுதாபி: ஐ.பி.எல்., லீக் போட்டியில் வருண் சக்ரவர்த்தி சுழலில் அசத்த, கோல்கட்டா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி, 92 ரன்னுக்கு சுருண்டு ஏமாற்றியது.

ஐ.பி.எல்., தொடர் 14 வது சீசனின் இரண்டாவது கட்ட போட்டிகள் எமிரேட்சில் நடக்கின்றன. நேற்று அபுதாபியில் நடந்த லீக் போட்டியில் கோஹ்லியின் பெங்களூரு அணி, மார்கனின் கோல்கட்டா அணியை எதிர்கொண்டது. ‘டாஸ்’ வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி பேட்டிங் தேர்வு செய்தார். பெங்களூரு அணியின் ஸ்ரீகர் பரத், ஹசரங்கா என இருவரும் ஐ.பி.எல்., அரங்கில் அறிமுகம் ஆகினர். கோல்கட்டா அணியில் வெங்கடேஷ் ஐயர் அறிமுகம் ஆனார்.

கோஹ்லி ‘அவுட்

பெங்களூரு அணிக்கு கோஹ்லி, தேவ்தத் படிக்கல் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. கோஹ்லி 5 ரன்னில் அவுட்டானார். அடுத்து படிக்கல், ஸ்ரீகர் பரத் இணைந்தனர். பெர்குசன், பிரசித் பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பினார் படிக்கல். மறுபக்கம் சுனில் நரைன் பந்தில் பவுண்டரி விளாசினார் பரத். 

இதன் பின் நிலைமை திடீரென மாறியது. பெர்குசன் வீசிய 6வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த படிக்கல் (22), கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக்கிடம் ‘கேட்ச்’ கொடுத்து வெளியேறினார். போட்டியின் 9வது ஓவரை வீசிய ரசல், இரட்டை அடி கொடுத்தார். முதல் பந்தில் பரத்தை (16) வெளியேற்றினார். 4வது பந்தில் அபாயகரமான டிவிலியர்சை (0), போல்டாக்கினார். 

சபாஷ் வருண்

மறுபக்கம் தன் பங்கிற்கு சுழலில் மிரட்டினார் வருண். தனது இரண்டாவது ஓவரின் 4 வது பந்தில் மேக்ஸ்வெல்லை (10) போல்டாக்கிய வருண், அடுத்த பந்தில் ஹசரங்காவை ‘டக்’ அவுட்டாக்கினார். ஒரு கட்டத்தில் 51/2 என்ற நிலையில் இருந்த பெங்களூரு, அடுத்து 15 ரன் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழக்க, 66/7 என்ற மோசமான நிலைக்கு சென்றது. தொடர்ந்து சச்சின் பேபி (7), ஜேமிசன் (4), சிராஜ் (8) திரும்ப, பெங்களூரு அணி 19 ஓவரில் 92 ரன்னுக்கு சுருண்டது. கோல்கட்டா சார்பில் வருண் 3, ரசல் 3, பெர்குசன் 2 விக்கெட் சாய்த்தனர். 

எளிய வெற்றி 

எளிய இலக்கைத் துரத்திய கோல்கட்டா அணிக்கு வெங்கடேஷ் ஐயர், சுப்மன் கில் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. இருவரும் ரன் மழை பொழிந்தனர். சுப்மன் கில் 48 ரன் எடுத்தார். கடைசியில் வெங்கடேஷ் அடுத்தடுத்து இரு பவுண்டரி அடிக்க, கோல்கட்டா அணி 10 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 94 ரன் எடுத்து 9 விக்கெட்டில் வெற்றி பெற்றது. வெங்கடேஷ் (41), ரசல் (0) அவுட்டாகாமல் இருந்தனர். 

 

கோஹ்லி ‘200’

பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி, நேற்று தனது 200 வது ஐ.பி.எல்., போட்டியில் களமிறங்கினார். இதில் 5 சதம், 40 அரைசதம் உட்பட மொத்தம் 6076 ரன்கள் எடுத்துள்ளார். தவிர தோனி (212), ரோகித் (207), தினேஷ் கார்த்திக் (204), ரெய்னாவுக்கு (201) அடுத்து 200 போட்டி என்ற மைல்கல்லை எட்டிய ஐந்தாவது வீரர் ஆனார் கோஹ்லி. 

 

பவுண்டரி, சிக்சருக்கு நன்கொடை

கொரோனா முன்கள பணியாளர்களுக்கு உதவும் வகையில் பெங்களூரு அணியினர் நேற்று அடித்த பவுண்டரி, சிக்சர், எடுத்த விக்கெட்டுகள் ஒவ்வொன்றுக்கும் அந்த அணியின் ‘டைட்டில்’ ஸ்பான்சர் நிறுவனம் நன்கொடை வழங்கியது. 

 

நீல நிற ‘ஜெர்சி’

கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க போராடும் இந்தியாவில் உள்ள முன்கள பணியாளர்களை கவுரவிக்கும் வகையில், கோல்கட்டாவுக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வீரர்கள் நீல நிற ஜெர்சி அணிந்து விளையாடினர். 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?