Advertisement


இந்தியாவில் கிரிக்கெட் திருவிழா

செப்டம்பர் 20, 2021 21:47
 Comments  
 


India to host New Zealand, West Indies, Sri Lanka, South Africa in home series
 

புதுடில்லி: இந்திய அணி சொந்தமண்ணில் வரும் சீசனில் 4 டெஸ்ட், 3 ஒருநாள், 14 ‘டுவென்டி–20’ போட்டிகளில் பங்கேற்கிறது. 

இந்திய அணி 2021–22 சீசனில் சொந்தமண்ணில் பங்கேற்கும் போட்டிகள் குறித்த விபரத்தை இந்திய கிரிக்கெட் போர்டு வெளியிட்டது. 

இதன் படி வரும் நவ.ல் இந்தியா வரும் நியூசிலாந்து அணி மூன்று ‘டுவென்டி–20’, இரண்டு டெஸ்ட் போட்டிகள் தொடரில் பங்கேற்கிறது. கடந்த 2016ல் 0–3 என தோற்ற பின், இந்திய மண்ணில் நியூசிலாந்து பங்கேற்கும் முதல் டெஸ்ட் தொடர் இது. 

அடுத்து 2022 பிப்., ல் இந்தியா வரும் விண்டீஸ் அணி மூன்று ஒருநாள் (பிப். 6, 9, 12), மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகிறது. 

இதன் பின் இந்தியா வரும் இலங்கை அணி இரண்டு டெஸ்ட், மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும்.

சென்னையில் போட்டி

இதனை அடுத்து ஜூன் மாதம் இந்தியா வரும் தென் ஆப்ரிக்க அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் மோதவுள்ளது. முதல் போட்டி ஜூன் 9ல் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது.

 

அட்டவணை விபரம்

நியூசிலாந்துக்கு எதிராக...

தேதி போட்டி இடம்

நவ. 17, 2021 முதல் ‘டுவென்டி–20’ ஜெய்ப்பூர்

நவ. 19, 2021 2வது ‘டுவென்டி–20’ ராஞ்சி

நவ. 21, 2021 3வது ‘டுவென்டி–20’ கோல்கட்டா

நவ. 25–29, 2021 முதல் டெஸ்ட் கான்பூர்

டிச. 3–7, 2021 2வது டெஸ்ட் மும்பை

விண்டீசிற்கு எதிராக...

பிப். 6, 2022 முதல் ஒருநாள் ஆமதாபாத்

பிப். 9, 2022 2வது ஒருநாள் ஜெய்ப்பூர்

பிப். 12, 2022 3வது ஒருநாள் கோல்கட்டா

பிப். 15, 2022 முதல் ‘டுவென்டி–20’ கட்டாக்

பிப். 18, 2022 2வது ‘டுவென்டி–20’ விசாகப்பட்டனம்

பிப். 21, 2022 3வது ‘டுவென்டி–20’ திருவனந்தபுரம்

இலங்கைக்கு எதிராக...

பிப். 25–மார்ச் 1, 2022 முதல் டெஸ்ட் பெங்களூரு

மார்ச் 5–9, 2022 2வது டெஸ்ட் மொகாலி

மார்ச் 13, 2022 முதல் ‘டுவென்டி–20’ மொகாலி

மார்ச் 15, 2022 2வது ‘டுவென்டி–20’ தர்மசாலா

மார்ச் 18, 2022 3வது ‘டுவென்டி–20’ லக்னோ

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக...

ஜூன் 9 முதல் ‘டுவென்டி–20’ சென்னை

ஜூன் 12 2வது ‘டுவென்டி–20’ பெங்களூரு

ஜூன் 14 3வது ‘டுவென்டி–20’ நாக்பூர்

ஜூன் 17 4வது ‘டுவென்டி–20’ ராஜ்கோட்

ஜூன் 19 5வது ‘டுவென்டி–20’ டில்லி

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?