Advertisement


டேவிஸ் கோப்பை: இந்தியா ஏமாற்றம்

செப்டம்பர் 18, 2021 22:03
 Comments  
 


Davis Cup Tennis, World Group 1, India, Finaland, Gunneswaran, Ramkumar, Bopanna
 

எஸ்பூ: டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்திய அணி 1–3 என, பின்லாந்திடம் தோல்வியடைந்தது.

இந்தியா, பின்லாந்து அணிகளுக்கு இடையிலான டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக சுற்று–1க்கான போட்டி பின்லாந்தில் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் உலகின் ‘நம்பர்–165’ வீரரான இந்தியாவின் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், 419வது இடத்தில் உள்ள பின்லாந்தின் ஓட்டோ விர்டானனை சந்தித்தார். ஒரு மணி நேரம், 25 நிமிடம் நீடித்த போட்டியில் குன்னேஸ்வரன் 3–6, 6–7 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

 

மற்றொரு போட்டியில், ஏ.டி.பி., தரவரிசையில் 187வது இடத்தில் உள்ள இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், 74வது இடத்தில் உள்ள பின்லாந்தின் எமில் ரூசுவோரியை எதிர்கொண்டார். இதில் ராம்குமார் 4–6, 5–7 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இந்திய அணி 0–2 என, பின்தங்கி உள்ளது.

 

இரட்டையரில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ராம்குமார் ராமநாதன் ஜோடி 6–7, 6–7 என, பின்லாந்தின் ஹென்ரி கான்டினன், ஹாரி ஹெலியோவாரா ஜோடியிடம் வீழ்ந்தது. அடுத்து நடந்த மாற்று ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் குன்னேஸ்வரன் 6–3, 7–5 என, பின்லாந்தின் பாட்ரிக் நிக்லஸ்–சால்மினனை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றார்.

 

இதனையடுத்து இந்திய அணி 1–3 என தோல்வியடைந்து, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள பைனலுக்கான ‘பிளே–ஆப்’ போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது. இனி, இந்திய அணி உலக சுற்று–1க்கான ‘பிளே–ஆப்’ போட்டியில் விளையாடும்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?