Advertisement


டென்னிஸ் ‘ரேங்க்’: எம்மா அபாரம்

செப்டம்பர் 13, 2021 21:56
 Comments  
 


Tennis, US Open champ Emma Raducanu shoots up 127 ranking spots
 

லண்டன்: உலக டென்னிஸ் தரவரிசையில் 23வது இடத்துக்கு முன்னேறினார் எம்மா ரடுகானு.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பைனலில், 150வது இடத்தில் இருந்த பிரிட்டனின் எம்மா ரடுகானு, கனடாவின் லேலாவை வென்று, முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தட்டிச் சென்றார்.

தகுதிச் சுற்றின் வழியாக பிரதான சுற்றுக்கு முன்னேறி கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் வீராங்கனையானார் எம்மா. இதனிடையே நேற்று சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் தரவரிசைப் பட்டியல் (‘ரேங்க்’) வெளியானது. இதில் யு.எஸ்.ஓபன் சாம்பியன் எம்மா, 127 இடங்கள் முன்னேறி, 23வது இடம் பிடித்தார். 

பைனலில் தோற்ற லேலா, 45 இடங்கள் முன்னேறி 28 வது இடம் பெற்றார். முன்னாள் ‘நம்பர்–1’ வீராங்கனை ஜப்பானின் ஒசாகா, 5வது இடத்துக்கு தள்ளப்பட்டார். கனடாவின் பியான்கா, 13 இடங்கள் பின்தள்ளப்பட்டு 20வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் ஆஷ்லோ பார்டி, பெலாரசின் சபலென்கா, செக் குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா முதல் மூன்று இடங்களில் உள்ளனர். 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?