Advertisement


தணியாத ஐ.பி.எல்., தாகம்! * அபுதாபியில் ரோகித், பும்ரா

செப்டம்பர் 11, 2021 22:30
 Comments  
 


IPL 2021 Mumbai Indians captain Rohit Sharma arrives in Abu Dhabi for UAE leg of tournament
 

அபுதாபி: கொரோனா அச்சம், மான்செஸ்டர் டெஸ்ட் ரத்து போன்ற பிரச்னைகளை கடந்து, பணம் கொட்டும் ஐ.பி.எல்., தொடருக்கு இந்திய வீரர்கள் தயாராகின்றனர். கேப்டன் ரோகித் சர்மா, பும்ரா அடங்கிய மும்பை அணியினர் தனி விமானத்தில் அபுதாபி சென்றனர்.

இந்தியாவில் 14வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடந்தது. 29 போட்டிகள் முடிந்த நிலையில் வீரர்களுக்கு ஏற்பட்ட கொரோனா காரணமாக தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. மீதமுள்ள 31 ஐ.பி.எல்., போட்டிகள், செப். 19ல் எமிரேட்சில் துவங்க உள்ளன. இதனிடையே, இந்தியா, இங்கிலாந்து மோத இருந்த மான்செஸ்டர் டெஸ்ட், கொரோனா அச்சம் காரணமாக ரத்தானது.

இதையடுத்து இங்கிலாந்தில் இருந்து விரைவாக கிளம்பி, கோடிகள் தரும் ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க நமது வீரர்கள் ஆர்வமாக உள்ளனர். டெஸ்ட் போட்டி ரத்தாகி 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில், மும்பை அணி நிர்வாகம் தனி விமானத்தை அனுப்பி, ரோகித் சர்மா, பும்ரா, சூர்யகுமார் யாதவ் என மூன்று வீரர்களை அபுதாபி கொண்டு வந்து விட்டது.

இதுகுறித்து மும்பை அணி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:

இந்திய அணியில் இருந்த மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா, பும்ரா, சூர்யகுமார் யாதவ் என மூவரும் தங்கள் குடும்பத்தினருடன் தனி விமானத்தில் அபுதாபி வந்தனர். ஐ.பி.எல்., விதிப்படி ஓட்டலில் 6 நாள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். மான்செஸ்டரில் கிளம்பும் முன்பும், அபுதாபி வந்த பிறகும் எடுக்கப்பட்ட கொரோனா சோதனையில் மூவரும் தேறினர்,’ என தெரிவித்துள்ளது.

தனிமை ஏன்

இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இரு அணி வீரர்களும் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தனர். இதனால் மான்செஸ்டர் டெஸ்ட் முடிந்ததும், அப்படியே ஐ.பி.எல்., பாதுகாப்பு வளையத்தில் இணைய இருந்தனர். தற்போது ஏற்பட்ட கொரோனா சர்ச்சை காரணமாக, இதற்கு இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அனுமதி மறுத்தது.

பி.சி.சி.ஐ., வெளியிட்ட அறிக்கையில், ‘எமிரேட்ஸ் வரும் வீரர்கள் 6 நாள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மூன்று கட்ட சோதனையில் தேறினால் மட்டுமே, அணியுடன் இணைய அனுமதிக்கப்படுவர்,’ என தெரிவித்தது. இதனால் தான் வீரர்கள் ஓட்டலில் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

 

கிளம்பினார் கோஹ்லி

பெங்களூரு அணி சார்பில் கேப்டன் கோஹ்லி, முகமது சிராஜ் என இருவரையும் துபாய் அழைத்து வர தனி விமானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பெங்களூரு அணி வெளியிட்ட அறிக்கையில்,‘எங்கள் வீரர்களின் பாதுகாப்பு தான் முக்கியம். அவர்கள் தனி விமானத்தில் கிளம்பி இன்று துபாய் வருவர். பின் 6 நாள் தனிமைப்படுத்தப்படுவர்,’ என தெரிவித்துள்ளது.

 

பேர்ஸ்டோவ், வோக்ஸ் விலகல்

ஐ.பி.எல்., தொடரில் இங்கிலாந்தின் பேர்ஸ்டோவ் (ஐதராபாத்), வோக்ஸ் (டில்லி), டேவிட் மலான் (பஞ்சாப்) பங்கேற்க இருந்தனர். தற்போது திடீரென மூவரும் விலகினர். பஞ்சாப் அணி வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘டேவிட் மலான் ஐ.பி.எல்., போட்டிகளில் பங்கேற்க மாட்டார். உலக கோப்பை, ஆஷஸ் தொடர் வரவுள்ளதால் தனது குடும்பத்தினருடன் இருக்க முடிவு செய்துள்ளார்,’ என தெரிவித்தது. அதேநேரம் ஆறு நாள் தனிமையில் இருக்க வேண்டும் என்ற புதிய விதி காரணமாக இங்கிலாந்து அணி வீரர்கள் விலகியதாக கூறப்படுகிறது.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?