Advertisement


கோப்பை வென்றது இலங்கை * மீண்டும் வீழ்ந்தது தென் ஆப்ரிக்கா

செப்டம்பர் 07, 2021 22:22
 Comments  
 


South Africa tour of Srilanka odi cricket
 

கொழும்பு: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 78 ரன்னில் வெற்றி பெற்ற இலங்கை அணி, 2–1 என தொடரை கைப்பற்றியது. 

இலங்கை சென்ற தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. மூன்றாவது போட்டி நேற்று நடந்தது. முதலில் களமிறங்கிய இலங்கை அணிக்கு அசலங்கா (47), சமீரா (29) மட்டும் கைகொடுத்தனர். மற்றவர்கள் கைவிட, இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 203 ரன்கள் மட்டும் எடுத்தது. தென் ஆப்ரிக்காவின் கேப்டன் கேஷவ் மஹராஜ் அதிகபட்சம் 3 விக்கெட் சாய்த்தார்.

எளிய இலக்கைத் துரத்திய தென் ஆப்ரிக்க அணி, இலங்கை ‘சுழலில்’ சிக்கியது. மலான் (18), கிளாசன் (22), பெலுக்வாயோ (17), லிண்டே (18), மஹராஜ் (15) இரட்டை இலக்க ரன்களை தாண்டினர். மற்றவர்கள் ஏமாற்ற தென் ஆப்ரிக்க அணி 30 ஓவரில் 125 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தீக்சனா அதிகபட்சம் 4 விக்கெட் வீழ்த்தினார். 78 ரன்னில் வெற்றி பெற்ற இலங்கை அணி 2–1 என ஒருநாள் தொடரை கைப்பற்றியது. 

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?