Advertisement


‘ஆட்டநாயகன்’ ஷர்துல் தாகூர் *ரோகித் பெருந்தன்மை

செப்டம்பர் 07, 2021 21:48
 Comments  
 


Shardul Thakur Deserved The Man Of The Match Rohit Sharma
 

லண்டன்: ‘‘நான்காவது டெஸ்டில் அசத்திய வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர் ஆட்டநாயகன் விருதை பெற தகுதியானவர்,’’என ரோகித் சர்மா தெரிவித்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது.  இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்து வெற்றிக்கு கைகொடுத்த இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது பெற்றார்.

பின் ரோகித் கூறுகையில்,‘‘டெஸ்ட் தொடரில் 2–1 என முன்னிலை பெற்றிருப்பது மகிழ்ச்சி. இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் பெற்ற இவ்வெற்றி சிறப்பானது. இப்போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் (57, 60) அரைசதம், பவுலிங்கில் 3 விக்கெட் வீழ்த்தியது என ஷர்துல் தாகூர் ‘ஆல்–ரவுண்டராக’ ஜொலித்தார். இவரது ஆட்டத்தை மறக்க முடியாது.

ஓராண்டாக இவரது ஆட்டத்தை கவனித்து வருகிறேன். பேட்டிங்கிலும் கடின முயற்சி எடுத்து விளையாடுகிறார். ஐந்தாவது நாளில் தான் வீசிய முதல் ஓவரிலேயே பர்ன்சை அவுட்டாக்கினார். கேப்டன் ஜோ ரூட்டையும் வெளியேற்றி வெற்றிக்கு வழிவகுத்தார். ஆட்டநாயகன் விருது எனக்கு கிடைத்தது. இவருக்கும் சேர்த்து விருதை வழங்கியிருக்க வேண்டும். ஆட்டநாயகன் விருதை பெற தகுதியானவர்,’’என்றார்.

 

தொட்டதெல்லாம் பொன்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறுகையில்,‘‘ஷர்துல் தாகூர் தொட்டதெல்லாம் பொன்னாகிறது. மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடுகிறார். இமாலய சிக்சர், கலக்கல் ‘ஸ்டிரெய்ட் டிரைவ்’ என வியக்கத்தக்க ‘ஷாட்’ அடிக்கிறார். பர்ன்ஸ், ரூட் விக்கெட்டை வீழ்த்திய விதம் பாராட்டுக்குரியது. 8வது இடத்திற்கு சிறந்த வீரர் கிடைத்திருக்கிறார். அன்னிய மண்ணில் நீண்ட காலம் கைகொடுக்கக் கூடிய வீரராக திகழ்கிறார்,’’என்றார்.


அடுத்த கபில் தேவ்

ஷர்துல் தாகூரை ‘அடுத்த கபில் தேவ்’ என சிலர் வர்ணிக்கின்றனர். இது குறித்து கவாஸ்கர் கூறுகையில்,‘‘சிறிது காலம் ஹர்திக் பாண்ட்யாவை கபில் தேவுடன் ஒப்பிட்டனர். தற்போது பவுலிங், பேட்டிங்கில் அசத்துகிறார் ஷர்துல். இவரை யாருடனும் ஒப்பிட முடியாது. என்னை பொறுத்தவரை இன்னொரு கபில் தேவ் என்பது சாத்தியமில்லாத ஒன்று,’’என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?