Advertisement


‘முதல்வன்’ பிரமோத் * பாட்மின்டனில் ‘முதல்’ தங்கம்

செப்டம்பர் 04, 2021 16:46
 Comments  
 


Pramod Bhagat becomes the first Indian badminton player to win a medal at the Paralympics
 

டோக்கியோ: பாராலிம்பிக் பாட்மின்டனில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என சாதனை படைத்தார் பிரமோத் பஹத்.

ஜப்பானின் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் 16 வது பாராலிம்பிக் போட்டி நடக்கிறது. முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட பாட்மின்டனில், ஆண்கள் ஒற்றையர் எஸ்.எல்., 3 பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பிரமோத் பஹத், ஜப்பானின் தய்சுகேவை சந்தித்தார். இதில் 21–11, 21–16 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் மனோஜ் சர்கார், பிரிட்டனின் டேனியலிடம் 8–21, 10–21 என எளிதாக வீழ்ந்தார்.

பிரமோத் பிரமாதம்

பைனலில் பிரமோத், டேனியல் மோதினர். முதல் செட்டையில் 2–5 என பின்தங்கிய பிரமோத், பின் சிறப்பாக செயல்பட 21–14 என வென்றார். அடுத்து நடந்த இரண்டாவது செட்டில் பிரமோத் 4–11 என பின்தங்கினார். இதன் பின் எழுச்சி பெற்ற பிரமோத் அடுத்தடுத்து புள்ளிகள் குவித்தார். கடைசியில் டேனியலை முந்திய பிரமோத், இரண்டாவது செட்டை 21–17 என கைப்பற்றினார். 45 நிமிட போராட்டத்தின் முடிவில் 21–14, 21–17 என வென்ற பிரமோத், பாராலிம்பிக் பாட்மின்டனில் தங்கம் வென்ற முதல் இந்தியர் ஆனார்.

மனோஜ் அபாரம்

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மனோஜ்–தய்சுகே மோதினர். முதல் செட்டை மனோஜ் 22–20 என போராடி வென்றார். அடுத்த செட்டை 21–13 என எளிதாக வசப்படுத்தினார். 47 நிமிட போட்டியில் முடிவில் 22–20, 21–13 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்ற மனோஜ், வெண்கலப்பதக்கம் கைப்பற்றினார்.

ஒடிசா (பிரமோத்), உத்தரகாண்ட்டில் (மனோஜ்) இருந்து பாராலிம்பிக் பதக்கம் வென்று முதல் நட்சத்திரம் என்ற பெருமை பெற்றனர்.

 

பிரதமர் மோடி பாராட்டு

பிரதமர் மோடி வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘ஒட்டுமொத்த இந்தியாவின் இதயங்களை வென்று விட்டார் பிரமோத். இவரது வெற்றி லட்சக்கணக்கானவர்களுக்கு துாண்டுகோலாக அமையும். வெண்கலம் வென்ற மனோஜிற்கு பாராட்டுகள். மணிஷ், சிங்ராஜின் வெற்றி இந்திய விளையாட்டின் ‘ஸ்பெஷல்’ தருணம்,’ என தெரிவித்துள்ளார்.


தேசியக் கொடியுடன் அவனி

பாராலிம்பிக் வரலாற்றில் முதல் தங்கம், இரண்டு பதக்கம் (தங்கம், வெண்கலம்) வென்ற முதல் இந்திய வீராங்கனை என வரலாறு படைத்தவர் 19 வயது சட்டக்கல்லுாரி மாணவி அவனி லெஹரா. இன்று டோக்கியோவில் நடக்கும் பாராலிம்பிக் நிறைவு விழாவில் பங்கேற்கும் இந்திய அணிக்கு தலைமை ஏற்று, தேசியக் கொடி ஏந்தி வர உள்ளார்.

இந்திய பாராலிம்பிக் கமிட்டி வெளியிட்ட அறிக்கையில்,‘நிறைவிழாவில் இந்தியா சார்பில் 11 பேர் பங்கேற்பர். அவனி லெஹரா மூவர்ணக் கொடி ஏந்தி வருவார்,’ என தெரிவித்துள்ளது.


ஒரே நாளில் 4 பதக்கம்

நேற்று ஒரே நாளில் இந்தியா 4 பதக்கம் கைப்பற்றியது. ஒட்டுமொத்தமாக இந்தியா 4 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் என 17 பதக்கங்கள் வென்றது.

 

விவசாய குடும்பம்

ஒடிசா பார்ஹார் மாவட்டம் அட்டாபிராவை சேர்ந்தவர் பிரமோத் 33. விவசாய குடும்பம். 5 வயதில் ஏற்பட்ட போலியோ காரணமாக காலில் பாதிப்பு ஏற்பட்டது. 2002ல் பாட்மின்டனில் களமிறங்கினார். செய்னா, சிந்து தான் இவரது ‘ரோல் மாடல்’. தற்போது தங்கம் வென்று சாதித்துள்ளார்.


கிரிக்கெட்டில் துவக்க வீரர்

பிரமோத் சிறுவயதில் கால்கள் பாதிப்பு இருந்தாலும் ஏதாவது ஒரு விளையாட்டில் பங்கேற்க வேண்டும் என ஆர்வமாக இருந்தார். கிரிக்கெட்டில் கவனம் செலுத்திய இவர், உள்ளூர் போட்டிகளில் துவக்க வீரராக களமிறங்குவார். சரியாக நடக்க முடியாத நிலையிலும் பீல்டிங்கில் அதிகமான பகுதிகளை ‘கவர்’ செய்வார். இந்த அனுபவம் கைகொடுக்க, 13 வயதில் பாட்மின்டன் விளையாடத் துவங்கினார்.

 

தவறான சிகிச்சை

உத்தரகாண்ட்டின் ருத்ரபூரை சேர்ந்தவர் மனோஜ். ஒரு வயதில் தவறான சிகிச்சை காரணமாக இரு கால்களும் பாதிக்கப்பட்டன. சிறு வயதில் அம்மாவிடம் ரூ. 10 வாங்கி, பழைய பாட்மின்டன் ராக்கெட்டுகளை வாங்கி விளையாடினார். கேன்சரால் பாதிக்கப்பட்ட போதும், மகனின் ஆர்வத்துக்கு தடை போட விரும்பாத இவரது அம்மா, வீட்டை அடமானம் வைத்து விளையாட அனுப்பினார். தற்போது பதக்கம் சென்று சாதித்துள்ளார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?