Advertisement


நாடு திரும்பினார் சுப்மன் கில்

ஜூலை 21, 2021 23:16
 Comments  
 


India tour of England, Shubman Gill returns home
 

புதுடில்லி: எலும்பு முறிவு காரணமாக சுப்மன் கில் இந்தியா திரும்பினார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. வரும் ஆக. 4 ல் நாட்டிங்காமில் முதல் டெஸ்ட் துவங்குகிறது. இதற்கான இந்திய அணியில் துவக்க வீரராக இடம் பெற்றவர் சுப்மன் கில். இளம் வீரரான இவருக்கு கெண்டைக்கால் எலும்பில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. இது சரியாக குறைந்தது இரண்டு மாத கால அவகாசம் தேவைப்படும். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய சுப்மன் கில், நேற்று நாடு திரும்பினார். இதுகுறித்து அவர் ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைதளத்தில் இரு போட்டோக்கள் வெளியிட்டார். 

விமானநிலையத்தில் எடுத்த போட்டோவில் இரு உடைந்த இதய வடிவ ‘எமோஜிக்கள்’ இருந்தன. மற்றொரு போட்டோவில் ‘வெல்கம் ஹோம் சுப்மன்’ என கேக்கில் எழுதப்பட்டு இருந்தது. இதனால் சுப்மன் கில் நாடு திரும்பியது உறுதியானது. 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?