Advertisement


இந்தியா அபார பந்துவீச்சு: கவுன்டி பயிற்சி போட்டியில்

ஜூலை 21, 2021 23:03
 Comments  
 


India, County, Practice Match, Test Cricket Series, Umesh, Siraj
 

செஸ்டர்–லீ–ஸ்ட்ரீட்: பயிற்சி போட்டியில் இந்திய பவுலர்கள் அசத்த, முதல் இன்னிங்சில் கவுன்டி அணி 220 ரன் எடுத்தது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் ஆக. 4ல் நாட்டிங்காமில் துவங்குகிறது. இதற்கு தயாராகும் விதமாக இந்திய அணி, கவுன்டி லெவன் அணியுடன் மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. செஸ்டர்–லீ–ஸ்ட்ரீட்டில் நடக்கும் இப்போட்டியின் முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இந்திய அணி  9 விக்கெட்டுக்கு 306 ரன்கள் எடுத்திருந்தது. பும்ரா (3), சிராஜ் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

இரண்டாம் நாள் ஆட்டத்தில் கிரெய்க் மைல்ஸ் பந்தில் பும்ரா (5) போல்டானார். முதல் இன்னிங்சில் இந்திய அணி 311 ரன் குவித்தது. கவுன்டி அணி சார்பில் மைல்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

 

பின் முதல் இன்னிங்சை துவக்கிய கவுன்டி அணிக்கு இந்திய வேகங்கள் தொல்லை தந்தனர். உமேஷ் யாதவ் பந்தில் ஜாக் லிப்பி (12) அவுட்டானார். பும்ராவிடம் ராபர்ட் யேட்ஸ் (1), முகமது சிராஜிடம் வாஷிங்டன் சுந்தர் (1) சரணடைந்தனர். தொடர்ந்து அசத்திய உமேஷ் ‘வேகத்தில்’ கேப்டன் வில் ரோட்ஸ் (11), லின்டன் ஜேம்ஸ் (27) அவுட்டாகினர். பொறுப்பாக ஆடிய ஹசீப் ஹமீத் (112) சதம் கடந்தார்.

 

இரண்டாம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் கவுன்டி அணி 220 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 3, முகமது சிராஜ் 2 விக்கெட் கைப்பற்றினர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?